X
தமிழ் » திரைப்படங்கள் » பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

Comedy | 10 Aug 2018 | U/A | 145 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

பியார் பிரேமா காதல் கதை

பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், ரேகா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பலர் இணைந்து நடித்த காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இர்பான் மாலிக், எஸ் என் ராஜராஜன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை :   சென்னையில் நாம் தினந்தோறும் பார்க்ககூடிய ஒரு சராசரி மிடிஸ் கிளாஸ் இளைஞன் ஹரிஷ் கல்யாண். அதே சென்னையில் நாம் அரிதாக பார்க்கும் மேல்தட்டு அல்ட்ரா மாடர்ன் தேவதை ரைசா வில்சன். வழக்கம் போலவே முதலில் ஹரிஷ் பின்பு ரைசா என இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமண பந்தத்தில் நம்பிக்கையில்லாத ரைசா, ஹரிஷை லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ நிர்பந்திக்கிறார். ஆனால் காதல், கல்யாணம், மனைவி, குழந்தை என வாழ்க்கையை நடத்தும் வெகுஜன மனப்பான்மையோடு உள்ள ஹரிஷுக்கு ரைசாவின் திட்டம் ஏற்புடையதாக இல்லை. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்வை வாழ்ந்தார்களா இல்லை திருமணம் செய்துகொண்டார்களா என்பது இளமை துள்ளும் பிற்பாதி.
Read More

பியார் பிரேமா காதல் நடிகர்கள் & படக்குழுவினர்

பியார் பிரேமா காதல் அணியின் தகவல்

இயக்குனர் இளன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜராஜன், இர்பான் மாலிக்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பியார் பிரேமா காதல் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
வழக்கமான காதல் கதை தான். ஆனால் அதை இளமை ததும்ப, புதுசாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளன். படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் கச்சிதம். யாரையும் வில்லனாகவோ, வில்லியாகவோ காட்டாமல், அனைவரையுமே எதார்த்தமாக காட்சிபடுத்தி இருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் அந்த வீட்டில் லிமிட்டாக செய்ததை, இங்கு அன்லிமிட்டடாக செய்திருக்கிறார்கள். ஒரு மிடிஸ் கிளாஸ் பையனை அப்படியே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஹரிஷ் கல்யாண். காதல், குறும்பு, அம்மாவிடம் பாசம் என கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். போட்டி போட்டு ஓவர் டேக் செய்கிறார் ரைசா. இருவரும் பிக் பாஸ் மூலம் கிடைத்த மைலேஜை, சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஹரிஷின் அம்மாவாக ரேகா, ரைசாவின் அப்பாவாக ஆனந்த் பாபு. இருவரும் இரு துருவங்கள். ஒரு சாதாரண தாயாக தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏங்கி தவிக்கிறார் ரேகா. ஆனால் தன் மகளின் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு அனுமதி தந்து ஆனந்தப்படுகிறார் ஆனந்த்பாபு. மகளின் தடுமாற்றத்தை உணர்ந்து, அதை சரி செய்யும் இடம் அருமை எல்லாம் சரிதான். ஆனால் அந்த லிவிங் டுகெதர் தான் நெருடல். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் என்பதை இன்னும் அட்வான்சாக காதலுக்கு முன்பே செக்ஸ் என சிந்தித்திருக்கிறார் இயக்குனர் இளம். இதெல்லாம் நம் கலாச்சார காலவர்களுக்கு கோபத்தை உண்டு செய்யாதா புரோ. அதுவும் ஒரு பெண் என்ன இவ்வளவு கேசுவலாகவா எல்லாவற்றையும் எடுத்துக்க முடியும். முன்பாதி, பின்பாதி எல்லாம் ஓ.கே., ஆனால் அந்த க்ளைமாக்ஸ் தான் செம சொதப்பல். எப்படி முடிப்பது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது திரைக்கதை.

பியார் பிரேமா காதல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பியார் பிரேமா காதல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+