X
தமிழ் » திரைப்படங்கள் » சீதக்காதி
சீதக்காதி

சீதக்காதி

Drama | 20 Dec 2018 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சீதக்காதி கதை

சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இயக்குனர் கிட்டத்தட்ட முதல் பட பாணியில் காமெடியுடன்  வழக்கமான கதைகளுள் வித்யாசமான கோணத்தில் அழுத்தமான வசனங்களில் சிந்திக்க வைக்கும் படைப்பாகும். கலைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன். கதை  இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்திற்கு நேர் முரண் படைப்புதான் 'சீதக்காதி'. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தினமும் நாடகம் நடத்தி வரும் 73 வயதாகும் 'அய்யா' ஆதிமூலம் (விஜய்சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து மக்கள் முன்னிலையில் மட்டுமே நடிப்பேன் என கூறி கலையின் மீது வெறி கொண்டவர் ஆக இருக்கிறார். நாடகத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் வருமானம் குறைவு, தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியாத நிலை, அதே நேரத்தில் பேரனின் ஆபரேஷனுக்காக தேவைப்படும் ஒரு பெரிய தொகை என பலவித சிக்கல்களில் இருக்கும்போது திரைப்படத்திற்குள் நுழைகிறார் அய்யா, இவரை வைத்து படம் தயாரிக்க வருகிறார் சுனில், திடீரென அய்யா நடிக்க மறுக்கிறார் அதனால் ஆத்திரம் அடையும் சுனில் நீதிமன்றத்தில் மனு அளிக்கிறார் பின்பு என்னவாயிற்று என்பதே மீதி கதை. கலைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
Read More

சீதக்காதி நடிகர்கள் & படக்குழுவினர்

சீதக்காதி அணியின் தகவல்

இயக்குனர் பாலாஜி தரணீதரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சீதக்காதி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
75 வயது முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்துகிறார். நாடகங்களில் நடிக்கும் போது குரல், உடல் மொழி என அனைத்திலுமே அந்த முதுமையை வெளிக்காட்டுகிறார். குறிப்பாக அவுரங்கசிப் நாடகத்தில் எட்டு நிமிடங்கள் ஓடும் சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். சீதக்காதியின் கதை நம்பமுடியாத ஒன்றாக இருப்பதால், படத்துடன் ஒன்ற முடியவில்லை. 'நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இங்குள்ள வியாபாரிகள் தான் அதை ஏற்க மறுக்கிறார்கள்' என்பது தான் படம் சொல்ல நினைக்கும் செய்தி. இதனை நம்பத்தன்மைமிக்க கதையில் சொல்லியிருக்கலாமே பாலாஜி. மொத்தத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதியை, உயிருள்ள ஜீவனாக படைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சீதக்காதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சீதக்காதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+