X
தமிழ் » திரைப்படங்கள் » துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

Action | 10 Sep 2021 | U | 146 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

துக்ளக் தர்பார் கதை

துக்ளக் தர்பார் அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, பார்த்திபன், சத்யராஜ், கருணாகரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை விஜய் சேதுபதியின் '96 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த இசையமைத்துள்ளார். குடும்பங்கள் கண்டு ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலாட்டாவில் ஒரு அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோவிந்த் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். துக்ளக் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் 2021 விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக 2021 செப்டம்பர் 10ல் ஒளிபரப்பாகியுள்ளது. பின் அன்று நள்ளிரவே நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர், ப்ரோமோ மற்றும் வீடியோ பாடல்கள் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் புகைப்படங்கள் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் கதை கதைக்கரு : ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் சிங்கார வேலன் (விஜய் சேதுபதி) அரசியலில் தனது அடையாளத்தை எவ்வாறு பதித்தார். இவரின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன? அதற்காக இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் கதை. துக்ளக் தர்பார் படத்தின் பிரத்யேக தகவல்கள் பிரேம் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றிவாகை சூடிய '96 திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் பிப்ரவரி 4 சென்னையில் நடை பெற்றது, அச்சமயம் இப்படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்த படத்தையும் தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மாமனிதன், லாபம், சயிர நரசிம்மரெட்டி, சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்து வந்த நிலையில் இப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது, திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கொரானா நோய் பரவல் காரணமாக திரையரங்குகள் மூட பட்ட நிலையில் இப்படம் ஆன்லைன் ஓடிடியில் வெளியாகும் என பல சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது. துக்ளக் தர்பார் திரைப்படம் முற்றிலுமாக உருவாகி பல மாதங்களாக வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் கடன் சுமை அதிகரித்ததால் இப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு, ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பாக துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என சன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 10ல் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படமாக இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
Read More

துக்ளக் தர்பார் நடிகர்கள் & படக்குழுவினர்

துக்ளக் தர்பார் அணியின் தகவல்

இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாள்
சங்கதி பாலாஜி தரணீதரன்
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ச, மகேந்திரன் ஜெயராஜு
தொகுப்பாளர் கோவிந்தராஜ்
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

துக்ளக் தர்பார் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
துக்ளக் தர்பார் - துக்கடா தர்பார்
மாலை மலர்
மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’... கொஞ்சம் BORE..!
பிஹைண்ட்வுட்ஸ்
அதகள காமெடி.. சுவாரஸ்ய திரைக்கதை என கலகலப்பான பொலிடிகல் Entertainer - துக்ளக் தர்பார்.
பில்மிபீட்
ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் சிங்கார வேலன் (விஜய் சேதுபதி) அரசியலில் தனது அடையாளத்தை எவ்வாறு பதித்தார். இவரின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன? அதற்காக இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே படத்தின் கதை.

துக்ளக் தர்பார் ட்ரெய்லர்

Video Thumbnail

துக்ளக் தர்பார் பாடல்கள்

துக்ளக் தர்பார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

துக்ளக் தர்பார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+