X
தமிழ் » திரைப்படங்கள் » வேலையில்லா பட்டதாரி 2
வேலையில்லா பட்டதாரி 2

வேலையில்லா பட்டதாரி 2

Action | Romance | 11 Aug 2017 | U |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

வேலையில்லா பட்டதாரி 2 கதை

வேலையில்லா பட்டதாரி 2 சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இரு மொழி திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தினை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயரித்துள்ளது. படத்தில், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், செல் முருகன் இவர்களுடன் பாலிவுட் நடிகை கஜோல் இணைந்துள்ளார்.  கதை : வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்தில் தனுஷ், அமலா பால்  கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமலா பால், தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக வருகிறார்.  இதுஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் குடும்பப் பொறுப்புகளை தானே ஏற்றுக் கொள்ளும் தனுஷ், கடைசியாக கிடைத்த கட்டிட பணியை சரியாக செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து வகையான விருதையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் கட்டிட நிறுவனம் கைப்பற்றுகிறது. ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷ்க்கு கிடைத்து விடுகிறது.  அனைத்திலும் தனது நிறுவனம் தான் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கஜோல், சிறந்த பொறியாளருக்கான விருது வாங்கிய தனுஷை தன்னுடைய கம்பனெிக்கு இழுக்க முயற்சி செய்கிறார். இயல்பாகவே அங்கு செல்ல விரும்பாத தனுஷ், அவருடன் பணிபுரிய மறுக்கிறார். இந்நிலையில், தனுஷை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு கஜோல் இடைஞ்சல் கொடுக்கிறார். கஜோலின் இடைஞ்சலால் அந்த கம்பெனியில் ஒப்பந்தமாகிய சில கட்டிட பணிகளும் கைவிட்டு போகிறது. இதையடுத்து அந்த கம்பெனியின் தலைமை அதிகாரி கஜோலை சென்று பார்க்கிறார். அவரிடம் தங்கள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது, தனுஷை வேலையில் இருந்து நீக்கினால், அவரது கம்பெனியில் இருந்து கைவிட்டு போன அனைத்து பணிகளையும் திரும்ப கிடைக்க செய்வதாக கஜோல் உறுதி அளிக்கிறார். ஆனால் தனுஷை வேலையில் இருந்து நீக்க முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி உறுதியாக தெரிவித்து விட்டு சென்றுவிடுகிறார். இந்நிலையில், தன்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று முடிவு செய்யும் தனுஷ், தனது வேலையை ராஜினாமா செய்கிறார். மேலும் கஜோலை நேரில் சென்று பார்க்கிறார். அப்போது அவரை கஜோல் தனது கம்பெனியில் சேரச் சொல்ல, கஜோலின் கம்பெனியில் சேர மறுக்கும் தனுஷ் தனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன். இனிமேல் தன்னை கஜோலால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதைத்தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி என்ற தனது அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார்? கஜோல் அவருக்கு மீண்டும் தொல்லைகளை கொடுத்தாரா? கஜோலுக்கு எதிராக தனுஷ் என்ன செய்தார்? வேலையில்லா பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

வேலையில்லா பட்டதாரி 2 நடிகர்கள் & படக்குழுவினர்

வேலையில்லா பட்டதாரி 2 அணியின் தகவல்

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் தனுஷ், கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வேலையில்லா பட்டதாரி 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+