»   »  வேலை இல்லா பட்டதாரி 2... மீண்டும் தமிழில் கஜோல்!

வேலை இல்லா பட்டதாரி 2... மீண்டும் தமிழில் கஜோல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிக்கும் வேலை இல்லா பட்டதாரி படத்தை க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth launches Velai Illa Pattathari 2

இந்தப் படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்க, தனுஷ் நாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்க வருகிறார் பாலிவுட் நாயகி கஜோல். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் மின்சாரக் கனவு.


Kajol makes her reentry in Velai Illa Pattathari 2

இந்தப் படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்.


Rajinikanth launches Velai Illa Pattathari 2

முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் இப்படத்திலும் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, விவேக், சரண்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகை கஜோல்.


கதை வசனத்தை தனுஷ் எழுத, சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். சௌந்தர்யா இயக்கிய முதல் படம் ரஜினியின் கோச்சடையான். இந்தியாவில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் படம் இது. 2014-ல் வெளியானது.


சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


Rajinikanth launches Velai Illa Pattathari 2

படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். அவர் காலில் விழுந்து இயக்குநர் சௌந்தர்யா ஆசி பெற்றார்.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது வேலலை இல்லா பட்டதாரி 2.

English summary
Superstar Rajinikanth has launched the shooting of Dhanush's Soundarya Rajinikanth directed Velai Illa Pattathari 2. Kajol is making her re entry in Tamil with this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil