Don't Miss!
- Sports
இனி பும்ரா எதுக்கு? ஐசிசி தரவரிசையில் புது உச்சம் தொட்ட முகமது சிராஜ்.. கோலியை முந்திய சுப்மான் கில்
- News
17 சிறுபான்மையினர் கொன்று எரிப்பு.. குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 22 பேர் விடுதலை.. ஆதாரமில்லையாம்
- Finance
அப்படி செய்யலான்னா நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.. ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை விளக்கம்!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 4,13,22 மற்றும் 31 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Technology
முக்கியமான ஒரு வசதி இல்லாமல் 2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வாரிசு படத்தில் நான் நடிக்கிறேனா.. இது என்ன புதுக்கதையா இருக்கு.. குஷ்பூ பளீச்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எண்ணூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விஜய் -ராஷ்மிகா மந்தனா பங்குபெறும் டூயட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
படத்தில் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளது.
முதல்ல
பைட்டு..
அப்புறம்தான்
டூயட்..
வாரிசு
படத்தில்
விஜய்யின்
மாஸ்டர்
பிளான்!

விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் சண்டைக் காட்சிகள் எண்ணூரில் நடத்தப்பட்டு வருகின்றன.

விரைவில் டூயட் சூட்டிங்
இதையடுத்து படத்தின் டூயட் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ள இந்த டூயட் காட்சிகளில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

லீக்கான படத்தின் காட்சிகள்
முதலில் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், பின்பு பெப்சி தொழிலாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி சென்னையில் நடத்தப்பட்டு பின்பு மீண்டும் ஐதராபாத்திற்கே மாற்றப்பட்டது. இந்தப் படம் ஆரம்பம் முதலே காட்சிகள் மற்றும் வீடியோக்கள் லீக்காகும் பிரச்சினையை சந்தித்து வந்தது.

சூட்டிங்கின்போது புகைப்படங்கள்
இந்தப்படத்தின் சூட்டிங்கின்போது பிரபு மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடிகை குஷ்பூ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிரபு தோள் மீது சாய்ந்துக் கொண்டு குஷ்பூ எடுத்திருந்த இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. முன்னதாக விஜய்யுடன் இணைந்தும் குஷ்பூ புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

வாரிசு படத்தில் நடிக்கவில்லை
இந்தப் படத்தில் நடித்துவந்த குஷ்பூ இந்தப் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது தான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். வாரிசு படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்தபோது தான் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குப்பட சூட்டிங்
தான் பக்கத்து படப்பிடிப்பு தளத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வந்ததாகவும் அப்போதுதான் விஜய், சரத்குமார், பிரபுவை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். வாரிசு படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.