»   »  மெர்சல் போனா என்ன... இதோ அதைவிட ஒரு பலே டைட்டில் கிடைச்சாச்சு!

மெர்சல் போனா என்ன... இதோ அதைவிட ஒரு பலே டைட்டில் கிடைச்சாச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் மெர்சல் படத் தலைப்புக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிய தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - அட்லீ இணையின் இரண்டாவது படம் மெர்சல். இந்தத் தலைப்புக்கு ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன.


Atlee to rename Mersal title

இந்த நிலையில் படத்தின் தலைப்புக்கு தடை கோரி, 'மெர்சலாகிட்டேன்..' என்ற படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன் நீதிமன்றத்துக்குப் போனார். அந்த வழக்கில் வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் படத் தலைப்பைப் பயன்படுத்தி விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இப்போது விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ புதிய முடிவெடுத்துள்ளனர். அதன்படி, மெர்சல் படத்துக்கு தடை தொடருமானால் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆளப்போறான் தமிழன்...' பாடல் வரியையே தலைப்பாக்கிவிடலாம் என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.


இந்தத் தலைப்புக்கு யாரும தடை கேட்டு நீதிமன்றம் போகமாட்டார்கள் அல்லவா...!

English summary
Vijay and Atlee have decided to rename Mersal as Aalaporan Tamilan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil