வாரிசு ஆடியோ ரிலீஸ்ல குஷ்பு பத்தி விஜய் அவ்ளோ பேசியிருந்தாரே... ஆனா படத்துல இல்ல... ஏன்?
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் முக்கியமான கேரக்டர்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் விஜய்யுடன் குஷ்புவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக முதலில் படக்குழு தெரிவித்திருந்தது.
ஆனால், வாரிசு படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்துள்ளது.

வாரிசு படத்தில் குஷ்பு
1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய்யும் குஷ்புவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குஷ்புவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், ஆனால் சிறிதுநேரமே திரையில் வரும் எனவும் சொல்லப்பட்டது. வாரிசு படப்பிடிப்பு தொடங்கிய போது இதுபற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், அதன்பின்னர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை டிவிட்டர் ஷேர் செய்திருந்தார் குஷ்பு.

ஆடியோ ரிலீஸில் குஷ்பு
விஜய்யும் குஷ்புவும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ வெளியான பின்னரே அவரும் வாரிசும் படத்தில் நடித்துள்ள உறுதியானது. ஆனால் அவரது கேரக்டர் பற்றி படக்குழு எதுவும் அறிவிக்காமல் இருந்தது. இதனால் தியேட்டரில் குஷ்புவின் கேரக்டர் என்னவென்பதை தெரிந்துகொள்ளலாம் என்ற சர்ப்ரைஸுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். முன்னதாக வாரிசு படத்துக்காக குஷ்பு 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. அதேபோல் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் குஷ்பு கலந்துகொண்டார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
மேலும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவங்களையும் பிரபல யூடியூப் சேனலின் பேட்டியில் ஷேர் செய்திருந்தார். ஆனால் நேற்று வெளியான வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள், அதில் ஒருகாட்சியில் கூட குஷ்பு வராததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். கடைசிவரை சின்ன காட்சியில் கூட குஷ்புவை பார்க்க முடியவில்லை. இதனை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். குஷ்புவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்யுடன் நல்ல கம்பேக் கொடுக்கலாம் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

வாரிசு ப்ளாக் பஸ்டர் ஹிட்
வாரிசு படத்தில் இருந்து குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரன்னிங் டைம் காரணமாக இந்த எடிட்டிங் நடந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று வெளியான வாரிசு வசூல் ரீதியாக பெரிய சக்சஸ் கொடுத்துள்ளது. ஃபேமிலி சென்டிமெண்டல், ஆக்ஷன், என கமர்சியல் ஹிட் கொடுத்துள்ள வாரிசு படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











