யப்பா பழனி மலை ஆண்டவா.. பொங்கலுக்கு எந்த பிரச்சனையுமில்லாமல் ஜனநாயகன் ரிலீஸ் ஆகணும்!

சென்னை: இயக்குநர் எச். வினோத் பழனி மலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் காட்சிகள் மீடியாக்களில் வெளியாகி உள்ளன. தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இயக்குநரான எச். வினோத் பழனி மலை முருகன் கோயிலில் வாழிபாடு நடத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நட்டி நட்ராஜ் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக அறிமுகமானவர் தான் எச். வினோத். தனது முதல் படத்தின் மூலமே கதை தான் கதையின் நாயகன் என்பதை நிரூபித்திருந்தார்.

Jana Nayagan Director H Vinoth visits Palani Temple to seek blessings

அடுத்ததாக கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி மீண்டும் தன்னுடைய திறமையை அவர் வெளிப்படுத்த அஜித்துக்கே இவரது இயக்கம் பிடித்துப் போய்விட்டது.

அஜித்துடன் 3 படங்கள்: பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமாரை வைத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை வினோத் இயக்கினார். துணிவு படத்தில் வங்கியில் நடைபெறும் மோசடிகள் குறித்து இவர் உருவாக்கிய கதை பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக ஜன நாயகன் படத்தில் என்ன மாதிரியான கதையை மக்களுக்கு சொல்ல காத்திருக்கிறார் என்கிற கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்பு தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பழனியில் சாமி தரிசனம்: இயக்குநர் எச். வினோத் மற்றும் இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் இருவரும் பழனி மலை கோயிலில் முருகனை வழிபாடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது மீடியாக்களில் வெளியான நிலையில், ஜனநாயகன் படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள்: விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறஹ்டு. அனிருத் அதற்காக கடைசி கட்ட பணிகளை பார்த்து வரும் நிலையில், பழனி மலை ஆண்டவரை வணங்கி பொங்கல் ரிலீஸ் பணிகளை தொடங்க எச். வினோத் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X