Just In
- 30 min ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் சொன்ன ஒத்த வார்த்தை.. மொத்த சண்டையும் காலி.. டிவிட்டரை திணறவிடும் நண்பர் அஜித்! #NanbarAjith
சென்னை: நடிகர் விஜய் சொன்ன ஒத்த வார்த்தையால் டிவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே இருந்த சண்டை காணாமல் போய்விட்டது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு லோகேஷ் கனகராஜ், அனிருத், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜயின் பெற்றோர் அவரது மனைவி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் என பலரும் பங்கேற்றனர். ரசிகர்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் விழா நடைபெற்ற அரங்கம் நிரம்பி வழிந்தது.

கறுப்பு நிற சூட்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கறுப்பு நிற கோட் சூட்டில் டக்கராய் பங்கேற்றார். அவரது உடை பலரின் கவனத்தையும் பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக மேடைக்கு வந்த விஜயிடம் தொகுப்பாளர் விஜய் அவரது உடை பற்றிகேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், நம்ம காஸ்ட்யூம் டிசைனர் பல்லவிதான் ஒவ்வொரு ஃபங்ஷனுக்கும் ரொம்ப மோசமா டிரெஸ் பண்றீங்க இந்த வாட்டி கோட் சூட் ட்ரை பண்ணலாமான்னு கேட்டாங்க.

நண்பர் அஜித் மாதிரி
சரி ட்ரை பண்ணலாம்.. நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணலாம்னு கோட் சூட் அணிந்து வந்தேன் என்றார். இதனைக் கேட்டதும் அங்கிருந்த விஜய் ரசிகர்கள் ஓவென கத்தி ஆரவாரம் செய்தனர். பின்னர் தளபதி தளபதி என முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய விஜய், சூட் நமக்கு சூட்டாகுதா என தொகுப்பாளர்களிடம் கேட்டார் விஜய். அதற்கு தொகுப்பாளர் விஜய் சூப்பரா சூட்டாகுதுன்னா.. மாஸ்.. என புகழ்ந்து தள்ளினார்.

டிவிட்டரில் ட்ரென்ட்
விஜயின் இந்த பேச்சை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். விஜய் அஜித் குறித்து பேசிய அந்த வீடியோ க்ளிப்ஸ் டிவிட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.விஜயின் இந்த பேச்சை தொடர்ந்து இரவு முதலே நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

நண்பர் அஜித் ஹேஷ்டேக்
நேற்று இரவு வரை ட்ராக் லிஸ்ட் விவகாரத்தால் மண்டி போட்ட வாத்தி என்ற ஹேஷ்டேக் ட்ரென்டானது. மாஸ்டர் ஆடியோ லாஞ்சை பின்னுக்கு தள்ளி டாப்பில் இருந்தது அந்த ஹேஷ்டேக். விஜயின் பேச்சுக்கு பிறகு நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக்குதான் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. வழக்கமாக டிவிட்டரில் மோதிக் கொள்ளும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், இணைந்து நண்பர் விஜய் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
|
மறக்க முடியாத நாள்
நடிகர் விஜய் நடிகர் அஜித் குறித்து பேசிய வீடியோ க்ளிப்பை ஷேர் செய்துள்ள அஜித் ரசிகரான இவர், விஜய் சாரிடம் இருந்து வந்த வார்த்தைகள் #நண்பர்அஜித் என கூறியதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
|
நெகட்டிவிட்டிக்கு கிக்கு
விஜய் பேசிய, உங்களின் வெற்றியின் மூலம் அவர்களை கொல்லுங்கள், உங்களின் சிரிப்பு மூலம் அவர்களை புதையுங்கள் என்ற வரியை குறிப்பிட்டுள்ள இந்த ரசிகர் விஜயும் அஜித்தும் சேர்ந்து நெகட்டிவிட்டியை எட்டி உதைப்பது போன்ற ஓவியத்தை ஷேர் செய்திருக்கிறார்.
|
மோதல் குறைந்தது
மேலும் ஸ்பிரட் பாஸிட்டிவிட்டி என்று குறிப்பிட்டு விஜயும் அஜித்தும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். நண்பர் அஜித் ஹேஷ்டேக்கால் இரு உச்ச நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.