சூர்யாவா? விஜய்யா? அடுத்து சிறுத்தை சிவா இயக்கப் போவது யாரை? பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி 2 நாட்களில் 100 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ள பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்து யாருடன் படம் பண்ணப் போகிறார் என்கிற கேள்வி தான் கோலிவுட் முழுக்க எழுந்துள்ளது.
நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கி ஹிட் கொடுத்த சிவா சிறுத்தை சிவா என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
தல அஜித்தின் 4 படங்களை இயக்கிய அவர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி நிலையில், அடுத்து எந்த டாப் ஹீரோவை சிவா இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வசூல் மன்னன்
தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் இப்போதும் ரஜினிகாந்த் என்பதை அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிரூபித்துக் காட்டி உள்ளார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பாசக்கார அண்ணனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பதை பார்த்து ஏகப்பட்ட தங்கைகள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

146 கோடி வசூல்
அடைமழையிலும் அண்ணாத்த படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் இரு நாட்களில் 112 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் 3வது நாளில் 146 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டி உள்ளது. முதல் வார இறுதியில் 170 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாவை கொண்டாடும் ரசிகர்கள்
அண்ணாத்த திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தை இளமையாகவும் பாசக்கார அண்ணனாகவும் திரையில் காட்டிய இயக்குநர் சிறுத்தை சிவாவை சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து யார் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்து சூர்யாவா
ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அண்ணாத்த திரைப்படத்திற்கு அடுத்து இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யாவை தான் வைத்து படமெடுக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் இயக்குநர் பாலா உடன் ஒரு படம் என இரு படங்களில் கமீட் ஆகி உள்ள நிலையில், சிவாவுடன் உடனடியாக படம் பண்ணுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் மீது குறி
இந்நிலையில், தளபதி விஜய்யின் பெயரும் இயக்குநர் சிவாவின் விருப்பப் பட்டியலில் இருப்பது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தல அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தளபதி விஜய்யை இயக்க வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம். தளபதி 66 படத்திற்கு பிறகு விஜய்யுடன் சிவா இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
வசூல் ரீதியாக மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் சிவாவுடன் யார் தான் படம் நடிக்க தயங்குவார்கள். உடனடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் அந்த டாப் ஹீரோ யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெகு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











