SK - Vijay: சிவகார்த்திகேயனை வைத்து விஜய்யை வம்பிழுக்கும் டான்.. கிளம்பிய புது பஞ்சாயத்து!
சென்னை: விஜய்யின் அடுத்த படமான ஜன நாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது இந்த படத்திற்கு போட்டியாக பொங்கலில் ரிலீஸ் ஆக உள்ள படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம். இந்த மோதலில் சிவகார்த்திகேயனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவரால் அதில் எதுவும் செய்ய முடியாத சூழலில் உள்ளார். இப்படி இருக்கையில் படம் ரிலீஸ்க்கு முன்னரே விஜய் படத்தோடு ஃபயர் விட பராசக்தி படம் திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு திரைத்துறையில் உலா வந்தது. இந்நிலையில் இந்த தகவல் குறித்த அடுத்த கட்ட தகவலை பிரபலம் தெரிவித்துள்ளார்.
ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படம். இந்த படத்துடன் அவர் திரைத்துறையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், அவர் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக முழு நேர அரசியலில் களமிறங்குவதாக தீர்மானித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த ஜன நாயகன் படம் வெளியாவது என்பது தேர்தல் அரசியலில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கே.வி.என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

மோதல்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் முதலில் வந்த தகவல் ஜன நாயகன் ஜனவரி 9ஆம் தேதியும் பராசக்தி ஜனவரி 14ஆம் தேதியும் ரிலீஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக இரண்டு படங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதியே வெளியாக போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி தினத்தில் ஜன நாயகன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பாடல்: இப்படி இருக்கையில், பராசக்தி படத்தின் முதல் பாடலும் வரும் தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக வலைபேச்சு அந்தணன் கூறியுள்ள தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது அவர் கூறுகையில், " இரண்டு படத்தின் முதல் பாடலும் ஒரே நாளில் வெளியாவதாக கூறப்பட்ட தகவலில் மாற்றம் உள்ளது. அதாவது, நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் கடைசியிலோ அல்லது இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலோ முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வம்புக்கு இழுக்கும் டான்: இவர் தெரிவித்துள்ள இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயனை வைத்து விஜய்யை வம்புக்கு இழுத்து வருகிறது திமுகவுக்கு நெருக்கமான டான் பிக்சர்ஸ் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது. பராசக்தி படத்தை சுதா கொங்கரா கதை திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், கீர்த்தி ஷெட்டி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











