»   »  தெறி கேரள உரிமை: ரூ 5.6 கோடிக்கு விற்பனை!

தெறி கேரள உரிமை: ரூ 5.6 கோடிக்கு விற்பனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் படங்களிலேயே இதுவரை இல்லாத சாதனையை தெறி செய்து வருகிறது. இந்தப் படத்தின் கேரள விநியோக உரிமை ரூ 5.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள். குறிப்பாக போக்கிரி படத்துக்குப் பிறகு கேரளாவில் விஜய் படங்கள் நல்ல விலைக்குப் போகின்றன.


Theri Kerala rights sold for Rs 5.6 cr

தெறி படத்தில் ஜோசப் குருவில்லா என்ற பெயரில் மலையாளியாக வேறு வருகிறாராம் விஜய். எனவே இந்தப் படம் முந்தைய படங்களை விட சிறப்பாக ஓடும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.


இதனால் இதுவரை எந்த விஜய் படத்துக்கும் தராத பெரிய விலையை தெறிக்கு கொடுத்திருக்கிறது கோல்டி பிலிம்ஸ் நிறுவனம். ரூ 5.6 கோடிக்கு இந்தப் படத்தின் கேரள உரிமையை இந் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் கர்நாடக உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது.


ஏப்ரல் 14-ம் தேதி 100க்கும் அதிகமான அரங்குகளில் கேரளாவில் வெளியாகிறது தெறி.

English summary
The Kerala rights of Vijay's Theri has been sold out for Rs 5.6 cr.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil