»   »   »  11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் படத்தில் நடிக்கிறேன்... பிரபுதேவா மகிழ்ச்சி- வீடியோ

11 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் படத்தில் நடிக்கிறேன்... பிரபுதேவா மகிழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள படம் தேவி. இதில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரபுதேவா, "நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது 'தேவி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்" என்றார். தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் பிரபுதேவா. அதன்பிறகு டைரக்டராக மாறி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

English summary
The actor and director Prabhu Deva while speaking in his Devi movie's audio launch has said that he is back in tamil cinema after 11 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil