»   »  மலையாள ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாகும் விஜய்!

மலையாள ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாகும் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்தில் தனது மலையாள ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ஒரு மலையாளியாக வருவதுடன், மலையாளமும் பேசப் போகிறாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Vijay's sweet shock to Malayalam fans

தெறி படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ஜோசப் குருவிலா! இந்தப் பெயரை அவர் உச்சரிப்பது ட்ரைலரிலும் இடம்பெற்றுள்ளது.


கேரளாவில் பெரும்பகுதி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இயக்குநர் அட்லி கூறுகையில், "படத்தின் 40% காட்சிகள் கேரளாவில் நடைபெறுகின்றன. டிரெயிலரில் பார்த்தபடி ஜோசப் குருவிலா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் அங்கு வசிப்பதாக காட்சிகள் உள்ளன. அதேநேரம் விஜய் மலையாளத்தில் பேசுவாரா என்பது சர்ப்ரைஸ்," என்றார்.


படத்தில் நிறைய மலையாள வசனங்கள் இருப்பதால், நிச்சயம் விஜய் மலையாளம் பேசி நடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அவர்களுக்கு இந்த தெறி நிச்சயம் இனிய அதிர்ச்சியைத் தரும் என்பது உறுதி.

English summary
Director Atlee hinted that Vijay is speaking Malayalam dialogues in few scenes in Theri movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil