Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி 66 ல் விஜய் என்ன லுக்கில் இருக்கார்னு பார்த்தீங்களா...தீயாய் பரவும் போட்டோ
சென்னை : தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்அப் பற்றிய போட்டோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி செம டிரெண்ட் ஆகி வருகிறது. விஜய்யின் இந்த போட்டோவை பார்த்து அனைவரும் வாவ் என அசந்து போய் பாராட்டி வருகின்றனர்.
விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடக்கும் இந்த ஷுட்டிங்கில் கடந்த வாரம் முதல் விஜய் பங்கேற்று வருகிறார். இதற்காக விஜய், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ செம வைரலானது.
ரியல் டான் உதயநிதி ஸ்டாலின் தான்.. ஒருவழியாக அந்த பாரத்தை இறக்கி வைத்த சிவகார்த்திகேயன்!

விறுவிறுப்பான ஷுட்டிங்
தளபதி 66 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட் வெளியிடப்பட்டதும், இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் முடிந்து, மூன்றாம் கட்ட ஷுட்டிங்கும் நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது. இரவு நேர ஷுட்டிங்காக இது நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தளபதி 66 பாடல்கள்
இதற்கிடையில் புதிய அப்டேட்டாக தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் தமன் ஏற்கனவே முடித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தின் இசை, தனது சினிமா வாழ்க்கையிலேயே தலைசிறந்த ஒன்றாக இருக்கும் என தமன் தனது பேட்டியில் கூறி உள்ளார்.

அடுத்த அப்டேட் என்ன
விரைவில் தளபதி 66 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எமோஷனல், குடும்ப படமாக தளபதி 66 படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அட விஜய்யா இது
இந்நிலையில் தளபதி 66 செட்டில் இருந்தபடி விஜய் வீடியோ கால் ஒன்றில் பேசி உள்ளார். தளபதி 66 பட லுக்கில் விஜய் பேசிய வீடியோ காலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்த போட்டோவை செம வைரலாக்கி வருகிறார்கள், அவரின் தீவிர ரசிகர்கள். இதில் செம ஸ்மார்டாக, இளமையான லுக்கில் விஜய் காணப்படுகிறார். பீஸ்ட் படத்தில் லேசாக நரைத்த தாடியுடன் காணப்பட்ட விஜய், தளபதி 66 படத்தில் டிரிம் செய்த கருப்பு தாடியுடன் உள்ளார்.

விஜய்யின் தளபதி 66 லுக்
10 வருடத்திற்கு முன் விளம்பரங்களில் நடித்த போது விஜய் என்ன லுக்கில் இருந்தாரோ, அதே லுக்கில் தற்போது காணப்படுவதால் ரசிகர்கள் முதல் அனைவரும் விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் இந்த ஸ்டைலான லுக்கிற்காகவே படம் செம ஹிட் ஆகும் என அவரின் தீவிரமான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.