கமல்ஹாசனின் ’விக்ரம்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
Recommended Video
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 4வது பிரம்மாண்ட வெற்றியை படைக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் படம் திரைக்கு வரும் தருணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கமலின் விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், காயத்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வந்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செம மாஸான தோட்டா தெறிக்கும் வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்.

9 மாதங்கள்
விக்ரம் படத்தை தொடங்கி 9 மாதங்கள் கடந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா பரவல் காரணமாக ஏகப்பட்ட தடைகள் ஏற்பட்டு படத்தின் ஷூட்டிங் பாதித்த நிலையில், இந்த படம் 110 நாட்களில் முடிக்கப்பட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

எப்போ ரிலீஸ்
வரும் ஏப்ரல் 28ம் தேதி கமல்ஹாசனின் விக்ரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது விக்ரம் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. வரும் மார்ச் 14ம் தேதி விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை தயாரிப்பாளர் கமல்ஹாசன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடும் நிலை
விக்ரம் படக்குழு அறிவித்துள்ள புதிய அறிவிப்பில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பு காரணமாக விக்ரம் படத்தின் படப்பிடிப்பே கைவிடும் நிலை உருவானதையும் குறிப்பிட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், கமலுக்கு கொரோனா பரவியதை குறிப்பிடுகின்றனரா? அல்லது வேறு பிரச்சனைகள் காரணமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

தள்ளிப் போகிறதா விக்ரம்
திடீரென இப்படியொரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரலில் இருந்து மே மாதத்திற்கு தள்ளிப் போகிறதா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இல்லை, விக்ரம் படம் எதிர்பார்த்த தேதியை விட முன்னதாக வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. வரும் மார்ச் 14ம் தேதி காலை 7 மணிக்கு அனைத்திற்கும் விடை கிடைத்து விடும்.

விஜய்சேதுபதி படம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் இரண்டு விஜய்சேதுபதி படங்கள் வெளியானால் நல்லா இருக்காது என நினைத்து மே மாதத்திற்கு விக்ரம் பட ரிலீஸை படக்குழு தள்ளி வைத்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











