தவெக மதுரை மாநாட்டுக்கு கூப்பிடல.. தளபதி விஜய் இந்த 5 விஷயத்தை பத்தி பேசணும்.. சனம் ஷெட்டி எதிர்பார்ப்பு!
சென்னை: பிக் பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தவெக அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று மக்களுக்கு பல்வேறு நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்த்து வருகிறார். அஜித் குமார் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னையில் நடைபெற்ற பேரணியில் சனம் ஷெட்டி பங்கேற்ற நிலையில், தவெக 2வது மாநில மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார்.
மற்றவர்கள் மாதிரி சும்மா பேசுவதற்காக தன்னை அழைத்தார்கள், தான் பிசியாக இருந்ததால் போகவில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மையிலேயே தன்னை தவெகவினர் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கவில்லை. அதனால், தான் அங்கே கலந்துக் கொள்ள போகவில்லை என வெளிப்படையாக பேசியுள்ள சனம் ஷெட்டி, விஜய் இந்த மாநாட்டில் இந்த 5 விஷயங்கள் குறித்து பேசினால் சிறப்பாக இருக்கும் என தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி: திரைப்படங்களில் நடித்தும் தனக்கு பெரிதாக எதிர்பார்த்த புகழ் வெளிச்சம் கிடைக்கவில்லை என்பதால் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார் சனம் ஷெட்டி. மக்கள் தலைவி என்கிற பட்டத்தை ரசிகர்களிடம் இருந்து பெற்ற அவர் எதிர்பார்க்காத வகையில் சீக்கிரமே வெளியேறினார். அதன் பின் பிக் பாஸ் விமர்சனங்களை கூறி வந்த அவர் சமூக பிரச்சனைகளுக்கும் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
தவெக மாநாட்டுக்கு கூப்பிடல: தவெக ஐடி விங் கூப்பிட்டதால் சென்னையில் நடைபெற்ற கண்டன பேரணியில் பங்கேற்றேன். ஆனால், இப்போ மதுரையில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால், அங்கே செல்லவில்லை என தான் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் சனம் ஷெட்டி தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த 5 விஷயங்களை விஜய் பேசணும்: கவினின் ஆணவக்கொலை, வரதட்சனை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது, பொருளாதாரத்தை திமுக அரசு சரியாக நிர்வகிக்காததால் மக்கள் படும் துயரம், தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக அடித்து கைது செய்தது மற்றும் தனியார் மையமாக்குதலை தடுத்து அரசே முக்கிய துறைகளை வைத்துக் கொண்டால் ஏகப்பட்ட இளைஞர்களுக்கு வேலையும் ஜாப் செக்யூரிட்டியும் கிடைக்கும் உள்ளிட்ட விஷயங்களை விஜய் பேசினால் நல்லா இருக்கும் என தனது கருத்துக்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications