» 

ஹீரோயின்

 

Vijayalakshmi with Parthiban in Sooriகன்னடத்தில் ஒரு ரவுண்டும முடித்து விட்டு தனது தாய் மொழியான தமிழில் பெரிய ரவுண்டு வரலாம் என்று நினைத்துபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நினைத்தது நடக்கவில்லை.

நமது இளைய நடிகர்கள் எல்லோருமே தமிழ் பேச தெரியாத கிரண்கள், திரிஷாக்கள பின்னால் ஓடியதால் மூத்தநடிகர்களான பிரபு, சத்தியராஜ் போன்றவர்களுடன் நடிக்கத் தான் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், அஜீத் என்று இளசுகளுடன் நடிக்க வேண்டும் என்ற கனவை மனதின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு வந்தவாய்ப்புகளை ஏற்றுக் கொண்டார்.

Vijayalakshmi with Parthiban in Sooriபார்க்க சத்தியராஜுக்கு மகள் மாதிரி இருந்தாலும் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த ராமச்சந்திரா படம் நன்றாகஓடிவிட்டது. இதில் விஜயலட்சுமியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

இதனால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இப்போதும் அதே மூத்த நடிகர்களிடம் இருந்து தான் வாய்ப்புக்கள் வருகின்றன.

சத்யராஜுடன் இன்னொரு படமும், சரத்குமாருடன் ஒரு படமும், பார்த்திபனுடன் ஒரு படமும் புக் ஆகி சூட்டிங்களும் தொடஙகிவிட்டன.

Vijayalakshmi with Sathyaraj in Ramachandraஆனால், இந்த எல்லா படங்களிலுமே அவரை உரித்து எடுப்பதில் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகத்தெரிகிறது.

சத்தியராஜுன் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். பார்த்திபனுடன் நடிக்கும் சூரி படத்தில்சேலையிலேயே ஏகத்துக்கும் கவர்ச்சியை சேர்த்திருக்கிறார்களாம்.

சான்ஸ் தான் முக்கியம். தாத்தா நடிகர்களுடனும் எப்படியும் நடிக்கத் தயார் என்று துணிந்து விட்டார் விஜய்லட்சுமிஎன்கிறார்கள்.

Read more about: actress, cinema, film, glamour, heroines, kolywood, sex, tamil news, tamilnadu, thatstamil, vijayalakshmi

Tamil Photos

Go to : More Photos