ரோஹித் சர்மாவுக்காக நிர்வாண போட்டோவை அர்ப்பணித்த சோபியா ஹயாத்
மும்பை: நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் தனது முன்னாள் காதலரும், கிரிக்கெட் வீரருமான ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்ததற்காக நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நேரிலோ, போனிலோ பாராட்ட வேண்டியது தானே. ஆனால் தற்போது மாடல்கள் பூனம் பாண்டே, சோபியா ஹயாத் போன்றோர் தங்கள் பப்ளிசிட்டிக்காக பாராட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுகிறார்கள்.
இந்த பழக்கத்தை நம் நாட்டில் துவங்கி வைத்த புண்ணியம் இந்த பூனம் பாண்டேவைச் சேரும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றபோது பூனம் நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளதை பாராட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளார் சோபியா ஹயாத்.

அர்ப்பணிப்பு
என் நிர்வாண போட்டோஷூட்டை வரலாற்று சாதனை ரன்களை குவித்த ரோஹித் சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இது உனக்காக. இந்தியாவுக்கு பெருமையான தினம் என்று சோபியா ட்வீட் செய்து நிர்வாண போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வழிகள் இருக்கு
பாராட்டுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. இந்நிலையில் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று நிர்வாண போஸ் போட்டோவை வெளியிடுவதை பார்த்து பலரும் முகம் சுளிக்கிறார்கள் என்பதை சோபியா போன்றோர் என்று புரிந்து கொள்வார்களோ.


Click it and Unblock the Notifications











