»   »  'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்

'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்திற்காக பேபி நைனிகாவுக்கு விருது கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படமும் வெற்றி மற்றும் வசூலை குவித்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டிற்கு வெளிவந்து வசூலை அள்ளியது.

Baby Nainika gets We award

ராஜா ராணி வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்கிய இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படத்தில், முக்கிய வேடத்தில், நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், கைத்தட்டலையும் பெற்றது.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற 12-வது வீ அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, பாக்யராஜ், பா. ரஞ்சித் மற்றும் பல நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தெறி படத்தில் அசத்தலாக நடித்த பேபி நைனிகாவுக்கு விருது வழங்கப்பட்டது.

English summary
Women Exclusive Magazine’s 12th We Awards 2016 function held at Chennai. Baby Nainika Got The First Award for Theri Movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil