தேசிய விருது நடிகை விரக்தி .. ஒல்லி இசையமைப்பாளர் மகிழ்ச்சி.. ஒரு வேளை அதுவா இருக்குமோ?
சென்னை : தேசிய விருது நடிகை ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்தது தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காகி உள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்த நடிகை, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.
க்யூட்டான கதாநாயகி ரோலில் நடித்து பெயர் எடுத்த இந்த நடிகை சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடித்து வருகிறார்.

க்யூட் நடிகை
லட்சணமான முகம், க்யூட்டான சிரிப்பு, அழகான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். அம்மணிக்கு தற்போது பாலிவுட் ஆசை வந்துள்ளதால், உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

விரக்தியில் நடிகை
சமீபகாலமாக அம்மணி நடிக்கும் படங்கள் பிளாப்பாகி வருகின்றன. இதனால் விரக்தியின் விளும்புக்கு சென்ற அந்த நடிகை, எனது வாழ்க்கையில் இது மிகவும் சோதனையான காலம்.. ஆனால் ,கடுமையாக உழைத்து மீண்டும் அந்த சோதனையை கடந்து வருவேன். இந்த நேரத்தில் என்னுடன் இருக்கும் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஒரு வேளை அதுவா இருக்குமோ
தேசிய நாயகி இப்படி ஒரு கருத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஒல்லி இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ஒரே நேரத்தில் இருவரும் அறிக்கை வெளியிட என்ன காரணம். ஒரு வேளை அதுவா இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விரைவில் திருமணமா?
ஒல்லி இசையமைப்பாளரும், தேசிய விருது நடிகையும் காதலிப்பதாகவும், இருவரும் பார்ட்டி டேட்டிங் என சுற்றி வருவதாகவும் தகவல்கள் பரவி வரும் நேரத்தில் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல், ஒல்லி இசைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் காத்துவாக்குல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











