நண்பன் பணத்தை ஏப்பம் விட்ட ஜாலி இயக்குநர்.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறாராம்!

By Staff

சென்னை: நண்பர்களை வைத்துக் கொண்டு படு ஜாலியாக படம் பண்ணி வந்த அந்த பிரபல இயக்குநர் நண்பர் ஒருவரின் பணத்தையே ஏமாற்றி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஜாலி இயக்குநர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே மினிமம் கியாரண்டி ஹிட் அடித்து வரும் நிலையில், அவருடன் இணைந்து புதிய படம் ஒன்றை பண்ணலாம் என அந்த நண்பர் நடிகர் முடிவு செய்துள்ளாராம்.

அதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அட்வான்ஸும் கொடுத்திருக்கிறார்.

மற்ற படங்களில் பிசி

மற்ற படங்களில் பிசி

ஆனால், அந்த ஜாலி இயக்குநர் மற்ற படங்களில் படு பிசியாக இருந்து வந்த நிலையில், இந்த படத்தை முடித்து விட்டு நம்ம படத்தை பண்ணுவார். அடுத்த படத்தை முடித்து விட்டு நம்ம படத்தை பண்ணுவார் என நண்பர் நடிகர் ரொம்பவே எதிர்பார்ப்புடன் வட்டி குட்டிப் போட்டாலும் பரவாயில்லை என காத்துக் கொண்டிருக்கிறார்.

லெவலே வேற

லெவலே வேற

சமீபத்தில் ஜாலி இயக்குநர் இயக்கிய அந்த வம்பு நடிகரின் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவரது ரேஞ்சே தற்போது வேறலெவலுக்கு சென்று விட்டது. அப்பாவை வைத்து படம் பண்ணலாம் என நண்பருடன் போட்ட ஒப்பந்தத்தையே மறந்து விட்டு மகனை வைத்து அதிரடியாக பான் இந்தியா படம் ஒன்றை இயக்க இறங்கி உள்ளாராம் அந்த ஜாலி இயக்குநர்.

கடனில் நண்பர்

கடனில் நண்பர்

ஜாலி இயக்குநர் ஒஹோ என அடுத்த லெவலுக்கு முன்னேறி செல்ல அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு படத்திற்காக பல கோடி கடன் வாங்கிய அந்த நண்பர் நடிகர் பெரும் கடனில் சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. மேலும், சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கிறது.

போன் கூட எடுக்கல

போன் கூட எடுக்கல

நண்பரின் பணத்தை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு அதை கொடுத்ததையே மறந்து விட்டாராம் அந்த ஜாலி இயக்குநர். கடந்த சில காலமாக நண்பருக்கு எப்படியாவது போன் பண்ணி பேசி, தனது நிலைமை சொல்லலாம் என நினைத்தால், ஜாலி இயக்குநர் அவர் போன் போட்டால் போனை கூட எடுப்பதில்லையாம்.

இப்படி மாறிட்டாரே

இப்படி மாறிட்டாரே

வெற்றி போதையால் பழைய நட்பைக் கூட மறந்து விட்டாரே என நடிகர் ரொம்பவே வேதனைப்பட்டு புலம்பி உள்ள நிலையில், மற்ற நண்பர்களை அணுகி இந்த விவாகரத்தை சுமூகமாக தீர்க்கவே அந்த நண்பர் நடிகர் முயற்சி செய்து வருவதாக பேச்சுக்கள் காத்துவாக்குல கசிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X