மாஸ் நடிகரே இப்போ என் பாக்கெட்டில்.. ஓவர் பந்தா பண்ணும் இயக்குநர்.. அதகளம் தாங்க முடியலையாம்!

By Staff

சென்னை: ஹாட்ரிக் வெற்றியை அடிக்கப் போகிறேன் என்கிற வெற்றிப் போதையில் அந்த இளம் இயக்குநர் செட்டில் ஓவர் பந்தா பண்ணி வருகிறாராம்.

தயாரிப்பு தரப்பைக் கூட மதிக்காமல் இயக்குநர் இஷ்டத்துக்கு நடந்து கொள்வதாகவும் ஆட்டிட்யூட் காட்டுவதாகவும் செட்டில் பேசிக் கொள்கின்றனர்.

மேலும், மாஸ் நடிகரே தனது பாக்கெட்டில் இருப்பது போன்ற மாயை உருவாக்கி பந்தா பண்ணி வருவது பலரையும் கடுப்பாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வெற்றி போதை

வெற்றி போதை

தான் எடுத்த இரு படங்களும் ஹிட் அடித்த நிலையில், மூன்றாவது படமும் பெரிய நடிகரை வைத்து இயக்கும் வாய்ப்பு அந்த இளம் இயக்குநருக்கு கிடைத்தது. ஆனால், அதே சமயம் டவுன் டு எர்த்தாக செட்டில் இல்லாமல் பந்தா பண்ணுகிறார் அந்த இயக்குநர் என தற்போது கோடம்பாக்கத்தில் பலரும் அதிருப்தி கலந்து பேச ஆரம்பித்துள்ளனர்.

டிவி பின்னணி

டிவி பின்னணி

டிவி பின்னணியில் இருந்து வந்த அந்த இயக்குநர் அப்பவே அதிகமாக பந்தா பண்ணும் பார்ட்டி தானாம். சினிமா வாய்ப்புக்காக தனது வாலை சுருட்டி வைத்திருந்த நிலையில், தற்போது படங்கள் வெற்றி பெற ஆரம்பித்து வசூல் குவியத் தொடங்கியதும் காலரை தூக்கி விட்டு கெத்துக் காட்ட ஆரம்பித்துள்ளாராம்.

அந்த குற்றச்சாட்டு

அந்த குற்றச்சாட்டு

மேலும், அந்த இயக்குநர் மீது லேட்டாக செட்டிற்கு வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் தற்போது கிளம்பி இருக்கிறது. மாஸ் ஹீரோவே செட்டிற்குள் வந்து விட்ட பிறகு தான் அந்த இயக்குநர் வருவதை அறிந்த தயாரிப்பு தரப்பு அவரிடம் குறிப்பிட்டு சொல்ல அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காமல் தட்டிக் கழித்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்பி வருகின்றன.

மாஸ் நடிகர் காதுகளுக்கு

மாஸ் நடிகர் காதுகளுக்கு

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு தரப்பு மாஸ் நடிகர் காதுகளையும் கடித்து விட்டதாம். விரைவில் அந்த இயக்குநருக்கு மாஸ் நடிகர் வார்னிங் கொடுக்க நேரிடும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், மொத்த படமும் நல்ல படியாக உருவாகி முடியட்டும் என்றே மாஸ் நடிகர் வெயிட் பண்ணி வருகிறாராம்.

தாமதமாகும் பணிகள்

தாமதமாகும் பணிகள்

இந்நேரம் முழு வேலையே முடிந்து பிசினஸ் வேலைகள் ஆரம்பித்து இருக்க வேண்டிய நிலையில், இயக்குநரின் மெத்தனத்தால் பல வேலைகள் அப்படியே இன்னமும் கிடப்பில் கிடக்கிறதாம். அதன் காரணமாகவே எந்தவொரு புதிய அப்டேட்டையும் வழங்க முடியாமல் தயாரிப்பு தரப்பு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

ஓவர் செலவு

ஓவர் செலவு

சொன்ன பட்ஜெட்டை தாண்டித்தான் ஒவ்வொரு முறையும் அதிக செலவுகளை இழுத்து விடுவதையே அந்த இயக்குநர் வாடிக்கையாக கொண்டிருக்கிறாராம். குறைந்த நாட்களில் படத்தை முடித்துக் கொடுப்பார் என்று நம்பியே இந்த புராஜெக்ட்டை மாஸ் நடிகர் கொடுத்த நிலையில் தற்போது இதற்கு மேல் அந்த இயக்குநருடன் இணைந்து பணிபுரியவே மாட்டார் என்கிற அளவுக்கு பெயரை அந்த இயக்குநர் கெடுத்துக் கொண்டு வருவதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கிறாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X