For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி?

  |

  சென்னை: பெயருக்கு மட்டும் தான் அந்த பிரபல நடிகர் உச்ச நடிகராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம், வந்த வேகத்தில், தியேட்டரை விட்டு வெளியேறி விடுகின்றன.

  அவரு ஸ்டைலுக்கு படம் பண்றேன் என்கிற பேர் வழியில், இளம் இயக்குநர்கள், அவரை வைத்து காமெடி தான் செய்து வருகின்றனர்.

  தற்போது, அந்த உச்சம் நடித்து வரும் படமும், டாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதை தான் என்கிற சங்கதி தெரிந்துள்ளது.

  eeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்?

  பத்து வருஷம் ஆகுது

  பத்து வருஷம் ஆகுது

  அந்த உச்ச நடிகர் நடிப்பில், நல்ல படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருஷம் ஆகுது. நீங்க நம்பவில்லை என்றாலும் அதுதான் நெசம் என்கிற மீம் போல, சுமார் பத்து வருட காலமாக அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் சொதப்பல் தான்.

  வெறும் பில்டப் தான்

  வெறும் பில்டப் தான்

  ஆனால், ஒவ்வொரு புதிய படங்கள் வெளியாகும் முன்னதாகவும், ஆகாசத்துக்கும் பூமிக்கும் கொடுக்கப்படும் விளம்பரங்கள் இருக்கே எல்லாமே வெறும் பில்டப் தான். படம் வெளியான பிறகு, அந்த உச்ச நடிகர் நடித்த படத்தை குறித்து, விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருவதைத் தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா கண்டுள்ளது.

  விநியோகஸ்தர்கள் முற்றுகை

  விநியோகஸ்தர்கள் முற்றுகை

  ஒவ்வொரு படம் உருவாகும் போதும், கொடுக்கப்படும் எக்கச்சக்க பில்டப்புகளால் ஏமாந்து போகும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் ஓனர்களும், படம் வெளியாகி மண்ணை கவ்விய பிறகு, அந்த உச்ச நடிகரின் வீட்டு வாசல் முன் முற்றுகை போராட்டங்கள் நடத்தி வருவது தொடர் கதை ஆகி வருகிறது.

  மரண மொக்கை

  மரண மொக்கை

  இந்த ஆண்டு அந்த உச்ச நடிகர் நடிப்பில் வெளியான அந்த காக்கி சட்டை படமும், மரண மொக்கை வாங்கி தியேட்டர்களில் இருந்து, ஒரே வாரத்தில் தூக்கி வீசப்பட்டது. தயாரிப்பு நிறுவனமும், எத்தனை முறை தான் பல கோடி வசூல் என முட்டுக் கொடுக்க முடியும். அதுவும் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ஒதுங்கியது.

  கிராமத்து பக்கம்

  கிராமத்து பக்கம்

  டானாகவும், காக்கி சட்டை போட்டும், வெளிநாடுகளில், வட மாநிலங்களில் என ஏகத்துக்கும் தயாரிப்பாளர் காசை காலியாக்கி, வரும் அந்த உச்ச நடிகர், தற்போது, கிராமத்து பக்கம் ஒதுங்கலாம் என முடிவு செய்துள்ளார். பல சொதப்பல் படங்களை கொடுத்து விட்டு, ஒரே ஒரு ஹிட் படத்தை இயக்கிய அந்த இயக்குநர் மீது இந்த முறை பந்தயம் கட்டியுள்ளார் அந்த உச்ச நடிகர்.

  பிரயோஜனமில்லை

  பிரயோஜனமில்லை

  வெறும் அந்த உச்சத்தை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை என தெரிந்துக் கொண்ட அந்த இயக்குநர், எந்தளவுக்கு ஸ்டார் கேஸ்டை கூட்ட முடியுமோ, அந்த அளவுக்கு கூட்டி வருகிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே பாதி கிணறு தாண்டி விடலாம் என்ற நம்பிக்கையில், அந்த உச்ச நடிகரும் இயக்குநரை நம்பி இறங்கி இருக்கிறார்.

  பழைய கதை

  பழைய கதை

  வின்டேஜ் படங்கள் தான் சூப்பர், உங்களை இன்னமும், மக்கள் அப்படி காணத்தான் துடிக்கின்றனர். என ஒரே அடியாக ஒட்டுமொத்த மசாலாவையும் அள்ளி, பூசி வருகிறாராம் அந்த இயக்குநர். கட கடவென நடைபெறும் ஷூட்டிங்கில், அந்த உச்ச நடிகருக்கு வேலை கம்மி தானாம். அதனால் தான் இந்த படத்திற்கும் ஓகே சொல்லி உள்ளார்.

  ரிஜெக்ட் பண்ண கதை

  ரிஜெக்ட் பண்ண கதை

  விஷயங்கள் இப்படி உருண்டோடி கொண்டு போய்க் கொண்டிருக்க, இன்னொரு பலமான செய்தி ஒன்றும் சிக்கி இருக்கிறது. இதற்கு முன்னாடி, டாப் நடிகரை இயக்கிய அந்த இயக்குநர், முதலில் இந்த கதையைத் தான் அவருக்கு, கூறியுள்ளார். ஆனால், அதை கேட்டு, கடுப்பான அந்த நடிகர், கதையை மாற்ற சொல்லி நடித்துள்ளாராம்.

  இந்த முறையும் போச்சா

  இந்த முறையும் போச்சா

  ஆனால், அதே கதையை அழகாக, ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ரா பிட்டுகள் போட்டு, இந்த நடிகருக்கு சொல்ல, அவரும் கிழியா இருக்குதே, செஞ்சிடலாம் என பச்சைக் கொடி காட்டி உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த உச்ச நடிகரின் படங்கள் வெளியாவதற்கு முன்பாக எழும் அதே விளம்பர பில்டப்புகளும் தற்போது, தலை விரித்து ஆடுகின்றன. பாவம் அந்த உச்சத்துக்கு இந்த படமும் எப்படி வரப்போகுதோ!

  English summary
  Star actor doing top actor rejected story for his upcoming movie. Star actor movies are get flopped continuously for a decade.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X