twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' மட்டும்?

    By Shankar
    |

    Vijay
    சென்னை: அதிமுக கூட்டணியில் விஜய்யின் மன்றத்தினருக்கு 3 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது கிடைக்காமல் போனதால், இந்த முறை தேர்தலில் இறங்காமல், வெறும் வாய்ஸ் மட்டும் தர விஜய் முடிவு செய்துள்ளதாக அவரது மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

    'ராகுல் காந்தியைச் சந்தித்தேன்' என்று பிரஸ் மீட் வைத்து விஜய் அறிவித்த பிறகு, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விஜய் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது. அவரது படங்களும் சிக்கலுக்குள்ளாயின.

    இந்த நிலையில், அதிமுகவுக்கு ஆதரவான நிலையை விஜய்யும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் எடுத்தனர். ஜெயலலிதாவை போயஸ் கார்டன் போய் சந்தித்தனர்.

    இந்தத்தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு 3 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கவில்லை எஸ் ஏ சந்திரசேகரனும்.

    ஆனால் பல்வேறு கட்சிகளுக்கிடையே அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. எஞ்சிய 160 தொகுகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. எனவே இனி விஜய் மன்றத்தினருக்கு சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.

    இதுகுறித்து விஜய் மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "இந்தத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால் தேர்தல் நெருங்கும் போது, விஜய்யிடமிருந்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கப்படும். அது நியாயமான ஒன்று என வா்ககாளர்களே நினைக்கும் அளவுக்கு இருக்கும்", என்றனர்.

    விஜய்க்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், தேர்தல் நெருங்கும் போது, அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டும் தர விஜய் திட்டமிட்டுள்ளார் என்றார்.

    English summary
    Actor Vijay may extend voice for ADMK front. He hoped for 3 seats from ADMK. But nothing was given. So he has decided to give just voice for the ADMK alliance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X