»   »  விஜய்யின் முயற்சி + ஸ்ரீதேவி நடிப்பு... இரண்டுமே சூப்பர்- புலியைப் பாராட்டிய ரஜினிகாந்த்

விஜய்யின் முயற்சி + ஸ்ரீதேவி நடிப்பு... இரண்டுமே சூப்பர்- புலியைப் பாராட்டிய ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் புலி படத்திற்கு மேலும் ஒரு சிறப்பாக அமைந்திருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து.

ஆமாம் சமீபத்தில் புலி படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் புலி படத்தையும், படக்குழுவினரையும் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.


I Really liked Puli, Vijay's Acting Impressed me - Says Rajinikanth

புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன.


படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும்.


நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்தப் படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது.


குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. Hats Off to the Puli Team என்று ரஜினி பாராட்டி இருக்கிறார்.


இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ஜீவா, நடிகை தமன்னா ஆகியோர் ஏற்கனவே புலி படத்தைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


படம் சூப்பர் ஸ்டாரைக் கவர்ந்ததில் சிம்புதேவன் இப்போ ஹேப்பி அண்ணாச்சி....

English summary
"I Really liked Puli very much. Vijay's Acting Impressed me and Sridevi's Acting was also Brilliant. it is a perfect Movie to Watch Along with the Family. Hats Off to the Puli Team" Says Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil