»   »  இன்றுமுதல் விஜய் 'இளையதளபதி' கிடையாது... வேற? #Mersal #Thalapathy

இன்றுமுதல் விஜய் 'இளையதளபதி' கிடையாது... வேற? #Mersal #Thalapathy

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் அறிமுகமானதே இளைய தளபதி என்ற பட்டப் பெயருடன்தான். 90களின் ஆரம்பத்தில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் ரஜினியின் தளபதி.

அந்தப் படம் வந்ததிலிருந்து தளபதி என்றால் ரஜினிகாந்த் (அரசியல் உலகில் தளபதி யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை).

எனவே எஸ் ஏ சந்திரசேகரன் தன் மகன் பெயருக்கு முன் இளைய தளபதி என்ற பட்டப் பெயரைச் சேர்த்தார்.

இளையதளபதி

இளையதளபதி

அன்று முதல் பைரவா வரை அவர் இளையதளபதி என்றே அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் இதை குறிப்பிடாமல் தவிர்த்து வந்த மீடியா, இப்போது இளையதளபதி விஜய் என்றே எழுதுகிறது.

தளபதி

தளபதி

ஆனால் அந்தப் பட்டப் பெயரை இப்போது துறந்துவிட்டார் விஜய். இன்று முதல் அவர் தளபதி விஜய். அப்படித்தான் விஜய்யின் 61வது பட முதல் தோற்றப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடிக்கும் மெர்சல் என்றே போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

புதிய பட்டம்

புதிய பட்டம்

இளையதளபதி என்ற பட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு புதிய பட்டத்தை விஜய்க்கு சூட்ட வேண்டும் என அவரது ரசிகர்கள் துடித்துக் கொண்டிருந்த நிலையில், தளபதி பட்டத்தைச் சூட்டியுள்ளது மெர்சல் குழு.

English summary
Vijay is having new title before his name from Mersal. Now he is not Ilaiya Thalapathy, just Thalapathy.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil