»   »  விஜய்யின் தீவிர ரசிகராக நடிக்கும் பிருத்விராஜ்

விஜய்யின் தீவிர ரசிகராக நடிக்கும் பிருத்விராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் அடுத்ததாக தான் நடிக்கப் போகும் படத்தில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக நடிக்கவிருக்கிறார்.

தமிழில் வெள்ளித்திரை, மொழி போன்ற படங்களில் நடித்த பிருத்விராஜ் தற்போது மலையாள உலகின் பிரபல நடிகராகத் திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான என்னு நிண்டே மொய்தீன் திரைப்படம் கேரளாவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

Prithviraj's Next Movie he Plays Huge Vijay Fan

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் மார்த்தாண்டன் இயக்கும் பாவட திரைப்படத்தில் விஜய்யின் ரசிகராக நடிக்கிறார் பிருத்விராஜ்.இதற்கு முன்னர் நடிகர் மம்முட்டியின் ரசிகராக ஒன் வேய் டிக்கெட் படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருந்தார். தொடர்ந்து தற்போது விஜய் ரசிகராக பிருத்விராஜ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியில் துப்பாக்கி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பிருத்விராஜ் கொண்டாடுவது போலவும், இடையில் சண்டை எழுவது போன்றும் காட்சிகளை இயக்குநர் எடுத்திருக்கிறார்.

பிருத்விராஜ் காமெடி வேடமேற்று நடித்திருக்கும் அமர் அக்பர் அந்தோணி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mollywood Star Prithviraj will play a strong Vijay fan in the upcoming movie Paavada, directed by Marthandan.Earlier, Prithviraj had played a Mammootty fan in the comedy entertainer One Way Ticket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil