»   »  விஜய்யுடன் மோதும் பைரவா தலைப்பை விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்?

விஜய்யுடன் மோதும் பைரவா தலைப்பை விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா ரிலீஸாகும் தேதியில் ராகவா லாரன்ஸின் சிவலிங்காவும் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

விஜய் பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பைரவா படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக வெளியிட திட்டமிட்டுள்ளார் பரதன்.

Raghava Lawrence to clash with Vijay in box office

இந்த பொங்கல் தளபதி பொங்கல் என விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு நடித்து வரும் சிவலிங்கா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

இளைய தளபதிக்கு இல்லாததா என்று பைரவா தலைப்பை விட்டுக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் லாரன்ஸ் தனது நண்பர் விஜய்யுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதுவாரா என்பது தெரியவில்லை.

சிவலிங்காவின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

English summary
Buzz is that Raghava Lawrence's Shivalinga may hit the screens for Pongal just like Vijay's Bairavaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil