»   »  மாஸ் ஓப்பனிங்குக்காக... தல, தளபதியின் மாஸ்டர் ப்ளான்!

மாஸ் ஓப்பனிங்குக்காக... தல, தளபதியின் மாஸ்டர் ப்ளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தல நடிகர் ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் மூன்றாம் உலகப்போர் அளவுக்கு அடித்துக்கொண்டாலும் அவ்வப்போது 'அவங்க ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்பா'... என்று செய்திகள் வரும். அது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என யோசிக்க வைத்திருக்கிறது அவர்களின் நெக்ஸ்ட் மூவ்ஸ்!

Thala & Thalapathi's master plan

நேற்று தளபதியின் 61 வது படத்துக்கான பூஜை மற்றும் தொடக்க விழா. அது அதிகாரப்பூர்வமாக உறுதியான பின்புதான், 'தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு' என என்று அறிவிப்பு வந்தது. இத்தனைக்கும் நேற்று ஒன்றும் விசேஷ நாள் கிடையாது. இதேபோல்தான் வேதாளம் - புலி - தெறி படங்களுக்கும் போட்டிக்கு ஏதாவது ஒன்றை ரிலீஸ் செய்வது நடந்தது. டீசரில் வரும் ரைம்ஸை வைத்துக்கூட டயலாக்கில் சண்டை போட்டுக் கொண்டார்கள். இது எல்லாமே திட்டமிட்டே நடப்பதாக திரை விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் திட்டமிட்டே ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறார்கள். இதனால் ரசிகர்கள் டைவர்ட் ஆகாமல் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓப்பனிங் கிடைத்து விடும். இதுதான் அந்த மாஸ்டர் ப்ளான்.

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க... அரியும் சிவனும் ஒண்ணு... அறியாதவன் வாயில மண்ணுன்னு!

English summary
Ajith and Vijay have a secret master plan to keep the mass opening for their movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil