»   »  அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்?

அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் தற்போது அட்லீயின் தெறியில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இந்தப்படத்தை வருகின்ற தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

Vijay - Atlee Team Up Again?

இந்நிலையில் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அட்லீ வீட்டிற்கு நடிகர் விஜய் திடீர் விஜயம் செய்திருக்கிறார்.

அட்லீயை சந்தித்து பேசிய விஜய் உங்களுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக ஒரு கதையை தயார் செய்யுங்கள் என்று கூறினாராம்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அட்லீ விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம்.அனைத்துத் தரப்பினரையும் திருப்தி படுத்தும் விதத்தில் கதையை அமைக்குமாறு விஜய் கூறியதால் அதற்கேற்றவாறு கதையை தயார் செய்ய அட்லீ திட்டமிட்டு இருக்கிறாராம்.

தெறி படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.இதற்கடுத்து அழகிய தமிழ் மகன் பரதன் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார்.

பரதன் படத்தில் நடித்து முடித்த பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் அஜீத் இதே முறையில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said after Theri Vijay Again Team Up with Atlee. The Official Announcement of this Film Expected soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil