»   »  'செஞ்சிருக்கீங்க': பைரவா இயக்குனரை பார்த்து இப்படி சொன்ன விஜய்

'செஞ்சிருக்கீங்க': பைரவா இயக்குனரை பார்த்து இப்படி சொன்ன விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தை பார்த்த விஜய் நெகிழ்ச்சி அடைந்து இயக்குனர் பரதனை பாராட்டியுள்ளார்.

அழகிய தமிழ் மகன் படத்தை அடுத்து பரதன் விஜய்யை இயக்கியுள்ள படம் பைரவா. விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள இந்த படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.

Vijay impressed: Appreciated Bharathan

கடந்த 4 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறைவடைந்து பூசணிக்காய் உடைத்தார்கள். இந்நிலையில் படமாக்கப்பட்ட காட்சிகளை பரதன் விஜய்க்கு போட்டுக் காட்டியுள்ளார்.

படத்தை பார்த்த விஜய் பரதனிடம், சொன்னதுக்கு மேலயே செஞ்சிருக்கீங்க. உங்கள் உழைப்புக்கு மரியாதை கிடைச்சிருக்கு என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

சண்டை காட்சிகளை பார்த்த விஜய் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவை அழைத்து அனல் பறக்குது என பாராட்டியுள்ளார். பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ilayathalapathy Vijay has appreciated Bharathan after watching his upcoming movie Bairavaa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil