»   »  விஜய்யின் பெரிய மனசு!

விஜய்யின் பெரிய மனசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னை வைத்து மிகப் பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்தவர் என்றாலும், அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதனுக்கு மீண்டும் பெரிய வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் விஜய்.

தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன தோல்விப் படங்கள் கொடுத்த இயக்குநர்கள் கூட, அடுத்த வாய்ப்பைப் பெற்று முன்னுக்கு வந்துவிட முடியும். ஆனால் விஜய் மாதிரி பெரிய ஹீரோவை வைத்து தோல்விப் படம் கொடுத்தவர்கள் எழுவது மிகப் பெரிய கஷ்டம்.

Vijay's generous decision

அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு இரட்டை வேடங்கள். ஏ ஆர் ரஹ்மான் இசை. பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் பெரிசாகப் போகவில்லை.

அந்தப் படத்தை இயக்கிய பரதனுக்கே தனது 60 வது படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் விஜய்.

இத்தனைக்கும் அவர் முன் இரு வேறு வாய்ப்புகளைத் தந்திருக்கிறது விஜயா நிறுவனம். பரதனின் கதையை வைத்துக் கொண்டு அதை இயக்க வேறு ஒரு கமர்ஷியல் இயக்குநரை அணுகலாம் என்று கூறியபோது, பரவாயில்லை.. பரதனே இயக்கட்டும். அவர் என்னை ஏற்கெனவே இயக்கியுள்ளார் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாராம் விஜய்.

English summary
Barathan who directed Azhagiya Tamil Magan is going to direct Vijay's 60th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil