»   »  இவர்களில் யார் விஜய்யின் அடுத்த பட இயக்குநர்?

இவர்களில் யார் விஜய்யின் அடுத்த பட இயக்குநர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இவர்களில் யார் அடுத்த விஜய் பட இயக்குநர் என்று போட்டியே வைக்கலாம் போல. அந்த அளவிற்கு தினசரி விஜய்யின் 60 வது படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின்றன.

புலி படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது அட்லீயின் இயக்கத்தில் விஜய் 59 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற விவாதம் மிகவும் சூடுபிடித்து வருகிறது.எந்தெந்த இயக்குனர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

விஜய்

விஜய்

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்க வைத்து ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய். புலி படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் 59 படத்தில் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற விவாதம் மிகவும் சூடுபிடித்து வருகிறது.எந்தெந்த இயக்குனர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன, இவர்களில் யாருக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி என்று 2 மெகா ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இதில் துப்பாக்கி படம் 100 கோடிப் பட்டியலில் இணைந்து விஜயின் அந்தஸ்தை உயர்த்திய படம். கத்தி படம் துப்பாக்கி அளவுக்கு இல்லை என்றாலும் நிறைய விருதுகளை விஜய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. 3 வது முறையாக இருவரும் இணையப் போகிறார்கள் என்று செய்திகள் அடிபட்டன, முருகதாஸ் கதை சொல்லியும் கூட விஜய் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை முருகதாஸ் இயக்கவிருப்பதால், அவருக்கு இந்தப் பட்டியலில் வாய்ப்புகள் குறைவுதான்.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

விஜய்யின் ஹிட் படங்களில் குஷிக்கு ஒரு தனியிடம் உண்டு, இன்றளவும் இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அது விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாததால் வெறும் வதந்தியாகவே இந்த செய்தி இருக்கிறது. இதற்கிடையில் தான் பதிவு செய்து வைத்திருந்த புலி தலைப்பை வேறு விஜய்க்கு எஸ்.ஜே.சூர்யா விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா

பிரபுதேவா

போக்கிரி என்ற மாபெரும் ஹிட் படத்தை விஜய்யை வைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா, ஆனால் அடுத்து இவர் இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு குறி தவறியதால் இரண்டாவது ஹிட்டை இவரால் பெற முடியாமல் போய்விட்டது. தற்போதைய நிலவரப்படி விஜய்க்கு கதை ரெடி பண்ணிய பிரபுதேவா, கையோடு அதனை விஜய்யிடம் கூறி சம்மதம் கேட்டு இருக்கிறாராம். பிரபுதேவாவின் கதைக்கு சம்மதம் என்று விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. எனினும் நம்பிக்கையோடு பிரபுதேவா காத்திருக்கிறாராம்.

மோகன் ராஜா

மோகன் ராஜா

இந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜாவின் தனி ஒருவன் படத்தைப் பார்த்து பாராட்டிய விஜய்யிடம் மோகன்ராஜா கதையின் ஒரு வரியை சொல்லி அவரைக் கவர்ந்து விட்டார் என்று கூறுகின்றனர். மோகன்ராஜா சொன்ன கதை பிடித்ததால் விஜய்யின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இருவரும் ஏற்கனவே இணைந்த வேலாயுதம் படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ஹரி

ஹரி

இதற்கிடையில் அழகிய தமிழ்மகன் படத்தை எடுத்த பரதன் எழுதிய கதை விஜய்க்கு பிடித்துப் போனதாகவும், அந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்குவார் என்றும் புதிதாக தகவல்கள் வெளியாகின.

மொத்தம் 10 இயக்குநர்கள்

மொத்தம் 10 இயக்குநர்கள்

இவர்களைத் தவிர இன்னும் 5 இயக்குநர்களிடமும் விஜய் கதை கேட்டு இருக்கிறாராம். ஆனால் அவர்களில் யாரிடமும் நீங்கள் தான் எனது அடுத்தப் பட இயக்குநர் என்று விஜய் உறுதி அளிக்கவில்லையாம்.

புலி படத்தால்

புலி படத்தால்

அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட புலி திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், விஜய் தனது அடுத்த படத்தின் கதையில் மிகவும் கவனம் எடுத்து வருகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 10 இயக்குநர்களின் கதையில் விஜய்யின் மனதைக் கவர்ந்த அந்த இயக்குநர் யார் என்பது இன்னும் ஒருசில வாரங்களில் தெரிந்து விடும்.

English summary
Vijay fans hope that the actor will choose the best team for 'Vijay 60'. Rumour will Suggest names of AR Murugadoss, Hari, S.J.Surya, Mohan Raja and Prabhu Deva are doing the rounds. Which Director Get The chance For Vijay 60th Movie? Wait And See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil