»   »  நான் "புலி" ரசிகனாக்கும்.. சொல்வது "பாயும் புலி" விஷால்!

நான் "புலி" ரசிகனாக்கும்.. சொல்வது "பாயும் புலி" விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் படத்தில் நடிப்பதை விட விஜய்யை இயக்குவதைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று ரசிகர்களிடம் நடிகர் விஷால் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுவும் எப்படி? இருவருக்கும் போட்டி போட்டி என்று ஊடகங்கள் சண்டை மூட்டி வரும் நிலையில் இப்படி கூறியுள்ளதுதான் கோலிவுட் உலகில் இன்றைக்கு பேச்சாக உள்ளது.

விஜய்க்கும் விஷாலுக்கும் மோதல் என்ற செய்தி வெளியாக காரணம் இல்லாமல் இல்லை. கத்தி' படத்துடன் தன் ‘பூஜை' படத்தை மோதவைத்தார் விஷால்.

போட்டி தலைப்பு

போட்டி தலைப்பு

‘புலி' என்று விஜய் படத்திற்கு தலைப்பு வைத்தால் போட்டிக்கு தன் படத்துக்கு ‘பாயும் புலி' என்று தலைப்பு வைத்தார் விஷால்.

மோதல் போக்கு ஏன்?

மோதல் போக்கு ஏன்?

விஜய்யை வேண்டுமென்றே சீண்டுகிறார் விஷால் என்று ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பகிங்கரமாகப் பேசப்பட்டு வந்தது.

ஒரே சமயத்தில்

ஒரே சமயத்தில்

சமீபத்தில் ரசிகர்களுடன் நடத்திய சாட்டிங்கில் அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விஷால் பதிலளித்துள்ளார். அப்போது, ஒரே சமயத்தில் சங்கர் படத்தில் நடிக்கவும், விஜய் படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தால் எதை தேர்வு செய்வீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்டார்.

விஜய்தான் தேர்வு

விஜய்தான் தேர்வு

‘கடினமான தேர்வுதான், இருந்தாலும் நான் விஜய்யை வைத்து தான் இயக்க முடிவு செய்வேன்' என்றார் விஷால். மேலும் விஜய் நடித்த ‘துப்பாக்கி' மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

விஜய் ரசிகன் நான்

விஜய் ரசிகன் நான்

எந்த ஒரு புதுமுக இயக்குநரும் விஜய்க்காகவே முதலில் கதை எழுதுவார்கள். நானும் அப்படித்தான் புதுமுக இயக்குநராக விஜய்காக கதை எழுதுவேன் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நான் விஜய்யின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார் விஷால்.

பாயும்புலி

பாயும்புலி

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் ‘பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 17ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

English summary
When Vishal, who was assisting Arjun in film directing, was launched a few years ago as a hero, he was considered the dark horse of Kollywood and a direct competitor to Vijay with a string of hits
Please Wait while comments are loading...