»   »  'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி இந்த வேடத்திலா நடிக்கிறார்..?

'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி இந்த வேடத்திலா நடிக்கிறார்..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'ஜுங்கா'. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க எமி ஜாக்‌ஸனுடன் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாம்.

Will Vijay Sethupathi play this role in Junga

விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் ஒரு மைல்கல். அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின்போதே அதன் பார்ட் 2-விலும் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். ஆனால் 'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப்போகும் கோகுல் 'ஜுங்கா' என இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார். இதுவும் முந்தைய படத்தைப் போல காமெடி கலக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Will Vijay Sethupathi play this role in Junga

இப்போது, படக்குழுவினர் முதல்கட்ட ஷூட்டிங்குக்காக பாரிஸ் போகிறார்களாம். விஜய் சேதுபதி ஏற்கெனவே வெளிநாட்டில் பாடல் காட்சிகளுக்காக ஷூட்டிங்குக்குப் போயிருந்தாலும், படத்தின் காட்சிகளுக்காகப் போவது இதுவே முதல்முறை.

Will Vijay Sethupathi play this role in Junga

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு டானாக நடிப்பதாகவும், கதை அந்தக் கேரக்டரை பாரிஸுக்கு நகர்த்திச் செல்கிறது எனவும் கூறுகிறார்கள். யோகிபாபு காமெடி வேடத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். டான்ஸ் மாஸ்டராக ராஜு சுந்தரம் பணியாற்றுகிறார்.

English summary
Vijay sethupathi's junga to be shot in paris. He played a role as a don in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil