விஜய் வீட்டை தொடர்ந்து த்ரிஷா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.. பதறிப்போன நடிகை!
சென்னை: நடிகை த்ரிஷாவின் சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டிற்குள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இந்த தகவல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து த்ரிஷாவின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இன்று அதிகாலை காவல்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலில்,
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, எஸ். வி. சேகர் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அனைவருன் வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

நடிகை த்ரிஷா: இதைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 10 மணியளவில், த்ரிஷாவின் நீலாங்கரை வீட்டிற்கு வந்த போலீசார். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு உதவியுடன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தீவிர சோதனையின் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஒரு போலியான மிரட்டல் என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
பதறிப்போன நடிகை: கரூர் சம்பவத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையின் நீலாங்கரை உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் பல கட்ட சோதனைக்கு பின், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கிய பின் விஜய் வீடு அருகே மக்கள் செல்ல அனுமதி அளிக்கின்றனர். விஜய் வீட்டிற்கு ஏற்கனவே மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது.
பெரும் சிக்கல்: கடந்த வாரங்களாக, நடிகர் சூர்யா, விஜயகாந்த், மற்றும் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தன. பிரபலங்களின் வீடுகளுக்கும் அவர்களின் அலுவலகங்களுக்கும் கொலை மிரட்டல் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனையடுத்து சைபர் குற்றம் காவல்துறையினர் அந்த அஞ்சல் முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர நடவடிக்கையில் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications