சூப்பே பங்காரம் ஆயனி.... அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய நடிகை பூர்ணா!

சென்னை : தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தரமான படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அளித்து வருகிறார் நடிகை பூர்ணா.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படம் பேசும், பிசாசு 2 ,அம்மாயி உள்ளிட்ட படங்களை தமிழில் கைவசம் வைத்திருக்கும் பூர்ணா இப்பொழுது அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

 கமர்ஷியலாக வெற்றி

கமர்ஷியலாக வெற்றி

நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூர்ணா அதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்று வந்தாலும் கமர்ஷியலாக அனைவரையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்திருந்தது.

 இன்றுவரை சொல்லிக்கொள்ளும்

இன்றுவரை சொல்லிக்கொள்ளும்

அர்ஜுனன் காதலி,கொடைக்கானல், கந்தக்கோட்டை ,துரோகி ,ஆடுபுலி, வேலூர் மாவட்டம், ஜன்னலோரம், தகராறு என பல திரைப்படங்களில் பூர்ணா நடித்திருந்தாலும் இன்றுவரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படம் இவருக்கு ஏனோ அமையவில்லை. அதனால் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் குறிப்பாக தெலுங்கு திரைப்படத் துறையில் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது.

 சர்ச்சைக்குரிய வேடங்களிலும்

சர்ச்சைக்குரிய வேடங்களிலும்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் பூர்ணா அதில் சில சர்ச்சைக்குரிய வேடங்களிலும் நடித்து உள்ளார். கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் பூர்ணா சவாலான கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்க தயாராக உள்ளார். கடைசியாக தலைவியில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Recommended Video

AMALA PAULகு பதில் நான் பண்றேன் | MICRO INTERVIEW | POORNA | SAMBAVAM MOVIE POOJA |FILMIBEAT TAMIL
 அச்சு அசல் கிராமத்து பெண் போல

அச்சு அசல் கிராமத்து பெண் போல

படம் பேசும், பிசாசு 2 ,அம்மாயி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் பூர்ணாவுக்கு கைவசம் உள்ளது . இதில் பிசாசு 2 படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பும் பூர்ணா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சு அசல் கிராமத்து பெண் போலவே மாறி சேலையில் அம்சமாக உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதற்கு சூப்பே பங்காரம் ஆயனி என்ற கேப்சனும் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X