»   »  ஹன்சிகாவோட ‘மச்சம்’ அப்படி!

ஹன்சிகாவோட ‘மச்சம்’ அப்படி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ள ஹன்சிகா, தொடர்ந்து தான் ஏற்கனவே ஜோடி சேர்ந்த ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

தமிழில் எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக வர்ணிக்கப் படும் ஹன்சிகா, தற்போது தமிழில் கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ஹன்சிகா ஜோடி சேர்ந்த நடிகர்களுடன், தற்போது அடுத்தடுத்து இரண்டாவது படங்களிலும் அவர் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

விஜயுடன்...

விஜயுடன்...

விஜயுடன் வேலாயுதம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா, தற்போது புலியிலும் ஜோடியாகியுள்ளார்.

ஜூலியட்...

ஜூலியட்...

இதேபோல், தனது அறிமுகப் படமான எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த ஹன்சிகா, தற்போது ரோமியோ ஜூலியட் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மீகாமன்...

மீகாமன்...

ஆர்யாவுடன் சேட்டை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் ஹன்சிகா. தற்போது மீண்டும் மீகாமன் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து வருகிறார்.

சிம்பு ஜோடியாக...

சிம்பு ஜோடியாக...

சிம்புவுடன்வாலு, வேட்டை மன்னன் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தார் ஹன்சிகா. ஆனால், அந்த இரண்டு படங்களுமே இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

சுந்தர்.சி. இயக்கத்தில்...

சுந்தர்.சி. இயக்கத்தில்...

சித்தார்த்துடன் சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா. தற்போது மீண்டும் அரண்மனை-2 படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் ஜோடியாகியுள்ளார்.

குட்டி குஷ்பு...

குட்டி குஷ்பு...

ஒரு சில ஹீரோக்களுடன் ஒருமுறையாவது ஜோடி சேர்ந்து நடித்து விட மாட்டோமா என சில நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கையில், தனது திறமையான நடிப்பால் ஹீரோக்கள் விரும்பும் நடிகையாக உள்ளார் ஹன்சிகா.

English summary
Actress Hansika is repeatedly acting with the same heros like Vijay, Jeyam Ravi, Simbu, Arya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil