»   »  தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் 'டாப் 3' நடிகைகள்

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் 'டாப் 3' நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளால் இவரின் சம்பளம் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு அடுத்த இடத்தை அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இந்த நடிகைகளின் சம்பள விவரம் மற்றும் அடுத்தடுத்து இவர்களின் நடிப்பில் வரப்போகும் படங்கள் குறித்து இங்கே காணலாம்.

தென்னிந்திய சினிமா

தென்னிந்திய சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக தற்போது நடிகைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகைகள் தற்போது கோடிக் கணக்கில் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலே சொன்ன 4 மொழிகளில் தமிழ் மற்றும் தெலுங்குலகினர் படங்களுக்கு செலவு செய்வதில் போட்டி போடுவதால் நடிகைகளின் காட்டில் தற்போது அடைமழை பெய்து கொண்டிருக்கிறது.

நயன்தாரா

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தற்போது நயன்தாராவின் கொடிதான் உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் 3 படங்களும் அடுத்தடுத்து வெற்றியைக் கொடுத்ததில் நயனின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மாசு மற்றும் நண்பேன்டா படங்கள் சொதப்பினாலும் அடுத்தடுத்த படங்கள் அவரைத் தூக்கி விட்டிருக்கின்றன.

3 மொழிகளிலும் வெற்றிகள்

3 மொழிகளிலும் வெற்றிகள்

தமிழில் 3 வெற்றிப் படங்கள், மலையாளத்தில் 1 மற்றும் தெலுங்கில் 2 வெற்றி படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது 3 கோடிவரை நயன்தாரா சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன. நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு, திருநாள் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. மேலும் தமிழில் காஷ்மோரா மற்றும் ஆனந்த் ஷங்கர் படம், தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு படம் மலையாளத்தில் மம்முட்டியுடன் 1 படம் என்று நயன்தாராவின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

அனுஷ்கா

அனுஷ்கா

நயனுக்கு அடுத்த இடம் ராணி நடிகையான அனுஷ்காவிற்கு பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற சரித்திரப் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா 2 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இஞ்சி இடுப்பழகி தவிர பாகுபலி 2 படத்தில் தற்போது நடிக்கவிருக்கிறார்.

த்ரிஷா

த்ரிஷா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் த்ரிஷா ஒரு படத்திற்கு 2 கோடிகள் வரை சம்பளமாக வாங்குகிறார். த்ரிஷாவின் நடிப்பில் வெளியான தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து நாயகி மற்றும் அரண்மனை 2 போன்ற படங்கள் தற்போது த்ரிஷாவின் கைவசம் இருக்கின்றன.

English summary
Nayanthara, Anushka and Trisha they are most paid actress in South Indian (Tamil, Telugu, Kannada and Malayalam) Cine Industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil