விஜய் பற்றி ஒரே வார்த்தைல சொல்லுங்க...பூஜா ஹெக்டே கொடுத்த அசத்தல் பதில்
சென்னை : தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி உள்ளார். தெலுங்கு, இந்தியில் தனது க்யூட்டான நடிப்பால் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.
Recommended Video

தற்போது விஜய்யுடன் நடிப்பதால் தமிழில் ஏராளமான ரசிகர்களின் மனதை பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே கவர்ந்து விட்டார். தனது கடின உழைப்பு, திறமையான நடிப்பு, அழகான எக்ஸ்பிரஷன்ஸ் என பல ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு பலரையும் சொக்க வைத்து வருகிறார்.
ஏற்கனவே பான் இந்தியன் நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் டைட்டிலுடன் ஃபஸ்ட் மற்றம் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதற்கு பிறகு பீஸ்ட் படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் என எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களான தளபதி 66, தளபதி 67 போன்ற படங்களின் அப்டேட்கள் வெளியாக துவங்கி விட்டன. ஆனால் பீஸ்ட் படத்தை பற்றி எந்த அப்டேட்டும் காணாததால், எப்போ பீஸ்ட் படம் பற்றிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கேள்வி - பதில் பகுதியில் ரசிகர்கள் ஒருவர், தளபதி விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என பூஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பூஜா, அச்சச்சோ...அவரை பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதாதே. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்...Sweetest என பதிலளித்துள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் வாவ் என கூறி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பூஜா, ஆரம்பத்தில் அது எனக்கு சவாலாக இருந்தது. அப்போதெல்லாம் நான் படங்கள் இல்லாமல் சும்மா இருந்த நாட்களை நினைத்துக் கொள்வேன். ஆனால் அதை நாம் மனதில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். நமது உயிராக நினைத்து கடினமாக உழைக்க வேண்டும். அதனால் என்னால் சமாளிக்க முடிந்தது என்றார்.
பீஸ்ட் படத்தில் தான் நடிக்க வேண்டிய பெரும்பாலான பகுதிகளை முடித்து விட்டாராம் பூஜா. டெல்லி ஷுட்டிங்கை முடித்து விட்டு, சமீபத்தில் சென்னை திரும்பிய பீஸ்ட் படக்குழு, அடுத்தக்கட்ட ஷுட்டிங்கை தொடங்கி உள்ளது.
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்து வந்தாலும், ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ், பாய்ஜான் படத்தில் சல்மான் கான், சர்கஸ் படத்தில் ரன்வீர் சிங், பெயரிடப்படாத படத்தில் மகேஷ் பாபு என டாப் ஹீரோக்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.


Click it and Unblock the Notifications











