»   »  ‘அட்டக்கத்தி’யை தூக்கி அப்பால போட்டு விட்டு, ‘ஸ்வேதா’வைப் பின்னாடி சேர்ந்த நந்திதா...!

‘அட்டக்கத்தி’யை தூக்கி அப்பால போட்டு விட்டு, ‘ஸ்வேதா’வைப் பின்னாடி சேர்ந்த நந்திதா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நந்திதா, தனது பெயரை நந்திதா ஸ்வேதா என மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழில் அட்டக்கத்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் அவரை ‘அட்டக்கத்தி' நந்திதா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் துணிச்சலான விளையாட்டு வீராங்கனையாகவும், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் துறுதுறு பெண்ணாகவும் நடித்திருந்தார். இது தவிர விஷ்ணுவுடன் முண்டாசுப்பட்டி, பரத்துடன் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிசியோ பிசி...

பிசியோ பிசி...

அழகு மற்றும் திறமையான நடிப்பால் தொடர்ந்து நந்திதாவுக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது உப்புக்கருவாடு, இடம் பொருள் ஏவல் மற்றும் புலி ஆகிய படங்களில் பிசியாக நந்திதா நடித்து வருகிறார்.

ஹேப்பி பர்த்டே...

ஹேப்பி பர்த்டே...

இந்நிலையில், இன்று தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நந்திதா. பிறந்தநாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் அவர்.

புலியில் நடிக்கிறேன்...

அதில், அவர் ‘ஆம் நான் விஜயுடன் புலி படத்தில் நடித்து வருகிறேன். இத்தனை நாள் இது தொடர்பாக வாய் திறக்காமல் இருந்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தற்போது புலிப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இனி, நந்திதா ஸ்வேதா..

மேலும், சமூகவலைதளங்களில் ஏற்படும் பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்க இனி, தனது பெயரை நந்திதா ஸ்வேதா என அழைக்கும் படியும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Actress Nandita Swetha, who is celebrating her birthday on 30 April, chose the special day to announce some exciting news. The actress confirmed that she will be playing an important role in the much-hyped Vijay movie. The news was shared by her via Twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil