»   »  ரன்வீர் சிங் ஒரு பச்சோந்தி: சொல்வது காதலி தீபிகா படுகோனே

ரன்வீர் சிங் ஒரு பச்சோந்தி: சொல்வது காதலி தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஒரு பச்சோந்தி என அவரின் காதலியும், நடிகையுமான தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் கைகோர்த்து ஊர் சுற்றுகிறார்கள். அவர்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பாலிவுட் தான் வாய் வலிக்க பேசுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் ரன்வீர் சிங் நடிப்பில் வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ள தில் தடக்னே தோ படத்தின் சிறப்பு காட்சியை தீபிகா பார்த்துள்ளார்.

ரன்வீர்

ரன்வீர்

தீபிகா பொதுவாக ரன்வீரின் நடிப்பு பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார். ஆனால் தில் தடக்னே தோ படத்தை பார்த்த அவர் ரன்வீரின் நடிப்பில் அசந்துவிட்டாராம். அந்த மகிழ்ச்சியில் ரன்வீர் பற்றி இல்லை அவரின் நடிப்பு பற்றி பேசியுள்ளார்.

பச்சோந்தி

பச்சோந்தி

ரன்வீர் ஒரு பச்சோந்தி. அவரை நான் பேண்ட் பாஜா பாரத், லூத்தேரா மற்றும் ராம் லீலா ஆகிய படங்களில் பார்த்துள்ளேன். தில் தடக்னே தோ படத்தில் அவர் வித்தியாசமாக நடித்துள்ளதை பார்த்து வியக்கிறேன் என்கிறார் தீபிகா.

காதலி

காதலி

ரன்வீர் சிங்கை காதலிப்பது பற்றி என்று தீபிகாவிடம் பேச்சு எடுத்தாலே அம்மணி டாப்பிக்கை மாற்றிவிடுவார். ஆனால் ரன்வீர் சிங்கோ நேரம் கிடைக்கும் போது எல்லாம் காதலை ஒப்புக் கொண்டு வந்தார்.

கோபம்

கோபம்

நான் காதலை பற்றி பேசாமல் நழுவுகிறேன், நீ என்னவென்றால் தீபிகா தான் என் காதலி என்று மைக் வைக்காத குறையாக கூறி வருகிறாய். வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாயா என்று தீபிகா ரன்வீரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாராம்.

பேட்டி

பேட்டி

அண்மையில் தில் தடக்னே தோ படம் குறித்து ரன்வீர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தீபிகா பற்றி கேட்டதற்கு வழக்கமாக ஒழுங்காக பதில் கூறும் அவர் அம்மணி விட்ட டோஸால் இந்த பேட்டி என்னைப் பற்றியா, தீபிகா பற்றியா என்று படக்கென்று கேட்டுவிட்டார்.

English summary
Deepika Padukone has called her boy friend Ranveer Singh as a Chameleon. She told this after watching his movie Dil Dhadakne Do.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil