»   »  பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்

பாலியல் தொல்லை ஒன்னும் புதுசு இல்லை: த்ரிஷா, வரு, ராய் லட்சுமி பகீர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் அப்பா பெரிய நடிகராக இருந்துமே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பாலியல் சில்மிஷம் குறித்து வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு இரண்டு மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். அவரின் முன்னாள் கார் டிரைவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம்.

வரலட்சுமி சரத்குமாரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தவறாக பேசியுள்ளார்.

வரலட்சுமி

வரலட்சுமி

என் அப்பா பெரிய நடிகராக இருந்துமே எனக்கு இந்த நிலைமை. அந்த ஆளு என்னை போன்று பிறரிடமும் பேசியிருப்பார் போன்று. இது போன்ற சம்பவங்கள் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் நடக்கிறது என்கிறார் வரலட்சுமி.

இயக்கம்

இயக்கம்

பெண்களிடம் தவறாக நடப்பவர்களை தண்டிக்க ஒரு இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளேன். ஒரு பெண் அல்லது குழந்தையை பலாத்காரம் செய்வது தண்டனைக்குரியது அல்ல என்று ஆண்கள் நினைக்கிறார்கள். இந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

என் சக நடிகைகளுக்கு இது போன்று நடப்பது கவலை அளிக்கிறது. மேலும் அதை நினைக்கும்போது கோபம் கோபமாக வருகிறது. அவர்கள் இந்த சூழலை கையாளும் விதத்தை பாராட்டுகிறேன். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று த்ரிஷா கூறியுள்ளார்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

பெண்கள் அட்ஜெஸ் செய்து போவது சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. இது போன்ற விஷயங்கள் குறித்து துணிச்சலாக பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வரலட்சுமி செய்தது போன்று என்கிறார் ராய் லட்சுமி.

English summary
Actresses Trisha, Varalakshmi Sarathkumar, Raai Lakshmi said that sexual harassment is not something new not only in film industry but also in other industries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil