»   »  வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வருங்கால கணவருக்கு துணையாக படத்தயாரிப்புப் பணிகளில் இறங்குகிறார் த்ரிஷா.

தொழில் அதிபர் வருண் மணியனை இந்த ஆண்டு மணக்கிறார் த்ரிஷா.

Trisha to produce movies in future

த்ரிஷா - வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் தடையில்லை என்று த்ரிஷா கூறியிருந்தார். புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போவதாகவும் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கம், வருண் மணியனுடன் இணைந்து படத் தயாரிப்பில் இறங்கவும் த்ரிஷா திட்டமிட்டுள்ளாராம்.

முதலாவதாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம். விஷாலை வைத்து சமர், தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் படங்களை இயக்கியவர் திரு.

இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

English summary
Trisha is planning to produce movies with her fiance Varun Manian.
Please Wait while comments are loading...