»   »  அடித்து நாற விரும்பவில்லை: டீசென்டாக பிரியும் அமலா பால், விஜய்

அடித்து நாற விரும்பவில்லை: டீசென்டாக பிரியும் அமலா பால், விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவர் மீது ஒருவர் குறை கூறி சண்டை போடாமல் அமைதியாக பிரிவது என்று இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகள் ஆனார். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் போட்ட கன்டிஷனை ஏற்றவர் தாலி ஏறிய பிறகு அதை மறந்துவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்ந்தார்.

பிரிவு

பிரிவு

அமலா தொடர்ந்து நடித்து வந்தது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அமலா கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

விவாகரத்து

விவாகரத்து

தனித் தனி வீட்டில் வசித்து வரும் அமலா பாலும், விஜய்யும் முறையே விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளார்கள். இதை விஜய்யின் தந்தை அழகப்பனும் உறுதி செய்துள்ளார்.

சுமூகமாக

சுமூகமாக

ஒருவர் பற்றி மற்றொருவர் குறை கூறி பேட்டி கொடுத்து சண்டை போட்டு ஊர், உலகம் எல்லாம் சிரிக்கும்படி இல்லாமல் அமைதியாக, சுமூகமாக பிரிவது என்று அமலாவும், விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

நடிப்பு, இயக்கம்

நடிப்பு, இயக்கம்

பிரிவை அடுத்து விஜய் தொடர்ந்து படங்கள் இயக்க உள்ளார். அமலா பால் நடிப்பை தொடர உள்ளார். அவர்கள் சுமூகமாக பிரிய முடிவு செய்ததை அவர்களின் நண்பர்கள் பாராட்டியுள்ளனர்.

English summary
Director AL Vijay and actress Amala Paul have decided to part ways smoothly and to concentrate on their career.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos