»   »  எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்று...: விஜய் பற்றி கீர்த்தி சுரேஷ்

எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்று...: விஜய் பற்றி கீர்த்தி சுரேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஒரு சிறந்த டான்ஸர். அதனால் பிற நடிகர்களுடன் ஒப்பிடுகையில் அவர் வித்தியாசமானவர் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த வேகத்தில் வளர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஹிட் கொடுத்த அவர் தற்போது இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


நடிக்க வந்த உடனேயே விஜய் பட வாய்ப்பு கிடைப்பது எளிது அல்ல.


விஜய்

விஜய்

கோலிவுட்டின் பெரிய நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்கிறோமே என்ற பயமே இல்லை. காரணம் அவர் அவ்வளவு சாதாரணமாகவும், எளிமையாகவும் உள்ளார்.


சூப்பர்

சூப்பர்

படப்பிடிப்பு தளத்தில் பிறரின் நடிப்பை முதலில் பாராட்டுபவரே விஜய் தான். அவ்வப்போது பாராட்டி சக கலைஞர்களை உற்சாகப்படுத்துகிறார் அவர்.


நடனம்

நடனம்

விஜய் ஒரு அருமையான டான்ஸர். அந்த திறமை தான் அவர் பிற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாகத் தெரிய உதவுகிறது. அவர் பிற நடிகர்களை விட கிரேட்.


தமிழ் படங்கள்

தமிழ் படங்கள்

நான் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறேன். இதையடுத்து வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


English summary
Keerthy Suresh said that Vijay is an excellent dancer and that makes him greater than anoy others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil