»   »  ஹோட்டல் அதிபராக ஆசைப்படும் சாப்பாட்டு பிரியை த்ரிஷா

ஹோட்டல் அதிபராக ஆசைப்படும் சாப்பாட்டு பிரியை த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகாவுக்கும், தனக்கும் இடையே சண்டை எல்லாம் இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் ஆசை நிறைவேறிவிட்டது. அரண்மனை 2 படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் த்ரிஷா. இனி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.

அரண்மனை 2 படத்தில் நடிக்கையில் த்ரிஷாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே சண்டை என்றும், இருவரும் படப்பிடிப்புக்கு வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷா கூறுகையில்,

ஹன்சிகா

ஹன்சிகா

அரண்மனை 2 படத்தில் நடிக்கையில் நானும், ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். எங்களுக்கு இடையே சண்டை எல்லாம் இல்லை. எங்களுக்கு இடையே சண்டை என்று வந்த கிசுகிசுக்களை படித்துவிட்டு நாங்கள் சிரித்தோம்.

வித்தியாசம்

வித்தியாசம்

ஒரே மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு அது பிடிக்காது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கையில் தான் அரண்மனை 2 பட வாய்ப்பு வந்தது. படத்தை பார்த்தவர்கள் எனது நடிப்பை பாராட்டியுள்ளனர்.

ஹோட்டல்

ஹோட்டல்

எனக்கு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எதிர்காலத்தில் ஹோட்டல் துவங்க திட்டமிட்டுள்ளேன்.

திருமணம்

திருமணம்

எனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை என் அம்மாவிடம் விட்டுவிட்டேன்.

English summary
Actress Trisha said that Hansika is not her enemy but a good friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil