எல்லோரும் கெட்டவர்கள் அல்ல... இயக்குனர் விஷால் மற்றும் நாசரின் மகன் அபிஹாசன் பிரத்தியேக பேட்டி
சென்னை: மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல என்று சில நேரங்களில் சில மனிதர்கள் திரைபடத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் தெரிவித்துள்ளார்.
பெரிய போட்டி எதுவும் இல்லாமல் திரையரங்குகள் நிறைய கிடைக்க பெற்ற படம் "சில நேரங்களில் சில மனிதர்கள்". நல்ல கதைக்கு இன்னும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பது எனது நம்பிக்கை என்றார் அறிமுக இயக்குனர் விஷால்.
ஜெயகாந்தன் எனும் மாபெரும் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் தலைப்பாக இருந்தாலும் இந்த கதை முற்றிலும் மாறுபட்டதாகும் என்று ஒட்டு மொத்த படக்குழுவும் சொல்லி வருகிறது. இந்த படத்தின் அறிமுக இயக்குனர் விஷால் மற்றும் நடிகர் நாசர் மகன் அபிஹாசன் இருவரும் சேர்ந்து பில்மிபீட் யூட்யூப் தலத்தில் வீடியோ பேட்டி கொடுத்து உள்ளார்கள் . அவர்களிடம் கேட்ட சில கேள்விகளை இங்கு பார்ப்போம் .

நான் குறும்படம் எடுக்க நினைத்தேன்
கேள்வி: விஷால் வெங்கட் சில நேரங்களில் சில மனிதர்களில் உங்கள் இயக்குனர் அவதாரம் எப்படியிருக்கு?
பதில் : இது ஒரு நல்ல அனுபவத்தையும், பயத்தையும், நம்பிக்கையையும் எனக்கு கொடுத்துள்ளது. என்னுடைய சந்தோஷத்திற்காக ஒரு குறும்படம் எடுக்க நினைத்தேன். குறும்படத்திற்காக நான் எழுதும்போது நிறைய கேரக்டர்கள் கொண்ட ஒரு நல்ல ஸ்கிரிப்ட் உருவானது. எழுத்தாளர் மணிகண்டன், ப்ரவீன் ஆகியோருடன் ஆலோசித்து இந்த ஸ்கிரிப்ட் ரெடி செய்தேன். இந்த ஸ்க்ரிப்ட் திரைப்படமாக உருவாக காரணமாக தயாரிப்பாளர்களுக்காக எனது நெஞ்சார்ந்த நன்றி. மேலும் இத்திரைபடத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்றினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எங்களது திரைப்படம் நல்ல கதையம்சத்துடன் தியேட்டரில் வெளியாகிறது. எப்போதும் நல்ல கதைக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.

பப்பு என்கிற அபிஹாசன்
கேள்வி: அபி ஹாசன் இந்த படத்தில் உங்களுடைய கேரக்டர் குறித்து...
பதில் : இந்த திரைப்படத்தில் பப்பு என்கிற கேரக்டரில் நடிக்கிறேன். ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். இந்த படத்தில் அமைந்துள்ள எல்லா கேரக்டரும் எனக்கு பிடிக்கும். காஸ்ட்யூம் உள்பட அனைத்தும் ஆலோசித்து முடிவெடுத்து எல்லோரும் ஒற்றுமையுடன் பணிபுரிந்தோம். எனது மொழி நான் பேசும் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு இந்த படத்தில் மிகவும் வித்யாசமாக இருக்கும்

அப்பாவும் நானும்
கேள்வி: அபி ஹாசன், நீங்களும் உங்க அப்பா நாசரும் இணைந்து நடிக்கும் முதல் படமா இது?
பதில் : இல்லை. ஒரு சில படங்களில் வெவ்வேறு ரோல் பண்ணியிருக்கோம். எந்த சூழ்நிலையிலும் திரைக்கதையை பகிர்ந்து கொள்ள மாட்டோம். அப்பா என்னிடம் இந்த படம் பற்றி கூறுகையில், நல்ல கதையம்சம் உள்ள படம் என்றார். இந்த திரைபடத்திற்கு அப்பாவின் இதயத்தில் தனி இடம் உண்டு என்பதை என்னால் உணர முடிந்தது.

சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது
கேள்வி: விஷால் இத்திரைபடத்தின் திரைக்கதை குறித்து...
பதில் : இத்திரைக்கதையில் சக மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நான் முதலில் உணர்ந்தது, மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள். நாமே இதை உருவாக்கி கொண்டோம் என்பதை பின்பு உணர்ந்தேன். இத்திரைப்படம் பார்த்து வெளியே வரும்பொழுது, மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. நல்லவர்கள் தான் என்பதை உணர முடியும். ஒரு சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது. எங்கோ இருக்கின்ற மனிதர்கள் நமது வாழ்க்கை மாற காரணமாக இருப்பார்கள். அது போல இத்திரைக்கதையும் இருக்கும்.

கமல் ஒரு பொக்கிஷம்
கேள்வி: நடிகர் கமலஹாசன் வருகை குறித்து...
பதில் : இத்திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் வந்து வாழ்த்தியது எங்களுக்கு எல்லாம் பெருமை. ஏனென்றால் சினிமாத்துறை குறித்த ஒரு பொக்கிஷம் தான் அவர். நான் தெருக்கூத்து போடும் பொழுது, கமல் நடித்த அன்பே சிவம் படம் தான் முன்னுதாரணம். மேலும் நான் அந்த காலத்துல ரஜினி, கமல் படங்கள் தான் அதிகமாக பார்ப்பேன். அவங்க இரண்டு பேர் படத்தையும் இயக்கியது கே.எஸ்.ரவிக்குமார். அவருடன் நாங்க பணிபுரிந்தது ரொம்ப சந்தோஷம் என்றார். இந்த படத்தின் அறிமுக இயக்குனர் விஷால் மற்றும் நடிகர் நாசர் மகன் அபிஹாசன் இருவரும் சேர்ந்து பல ஸ்வராஸ்ய கேள்வி பதில்கள் நிறைய உள்ளது. முழு வீடியோ காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் தளத்தில் காணலாம் .


Click it and Unblock the Notifications











